Vadivelu: "வடிவேலு ஒரு லூசு.." ரமேஷ் கண்ணா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
வடிவேலு லூசு மாதிரி பேசிவிட்டாரு என்று பிரபல நடிகர் ரமேஷ்கண்ணா கூறியது ஏன்? என்று கீழே விரிவாக காணலாம்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆதவன். இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருப்பார். இந்த படத்தில் சூர்யா, நயன்தாரா, வடிவேலு, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இவர்களுடன் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியும் நடித்திருப்பார்.
வடிவேலுவால் கோபம் அடைந்த சரோஜாதேவி:
இந்த படத்தில் வடிவேலு சரோஜாதேவியை குறிப்பிட்டு மேல ஒரு அம்மா ஃபுல் மேக்கப்போட படுத்திருக்கும் என்று வசனம் பேசியிருப்பார். இந்த வசனம் காரணமாக சரோஜா தேவி கடும் கோபம் அடைந்துள்ளார். இதுதொடர்பாக, நடிகர் ரமேஷ் கண்ணா ஒருமுறை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, அவங்க எங்க எடுத்துகிட்டாங்க. திட்டு திட்டுனு திட்டுனாங்க. வடிவேலு சொந்தமா போட்டுவிட்டான் டயலாக்கை. மேக்கப் போட்டு படுத்திருப்பாங்கனு. அவன் போட்டுவிட்டான் டயலாக்.
அந்தாளு ஒரு லூசு:
அந்தம்மா எனக்கு போன் பண்ணி ரமேஷ் கண்ணா நானா உங்ககிட்ட நடிக்க சான்ஸ் கேட்டேனா? நீங்களா வந்து என்கிட்ட கேட்டீங்க. நடிக்க வச்சுட்டு இப்படி டயலாக் போடலாமா?னு கேட்டாங்க.
அம்மா.. அந்தாளு ஒரு லூசு மாதிரி பேசிட்டான்மானு சொன்னேன். நான் என்ன மனோரமா மாதிரி காமெடி ஆர்ட்டிஸ்ட்டா?னு கேட்டாங்க. அது உண்மைதானே. அவங்களை வச்சு இந்த டயலாக் சொல்லலாமா? அப்புறம் என் பையனுக்கு பெங்களூர்ல கல்யாணம் நடந்துச்சு. அதுக்கு எல்லாம் வந்துட்டாங்க. அன்பா பழகுறவங்க.
இவ்வாறு அவர் பேசினார்.
கொடிகட்டிப் பறந்த சரோஜா தேவி:
87 வயதான சரோஜாதேவி தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக திகழ்ந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்த கால நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 60, 70 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் கதாநாயகியாக உலா வந்தவர். 1955ம் ஆண்டு முதல் நடித்து வரும் சரோஜா தேவி நாடோடி மன்னன், தாய் சொல்லை தட்டாதே, பார்த்தால் பசி தீரும், அன்பே வா, பெரிய இடத்து பெண், படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, நான் ஆணையிட்டால், நாடோடி என ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
1997ம் ஆண்டு ஒன்ஸ்மோர் படத்திற்கு பிறகு தமிழில் 12 வருடங்களுக்குப் பிறகு ஆதவன் படத்தில் சரோஜா தேவி நடித்தார். அதன்பின்பு, அவர் தற்போது வரை தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. தமிழ் மட்டுமின்றி கன்னடம், இந்தியிலும் அவர் நடித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

