மேலும் அறிய

Vijay Sethupathi: பாய்ஸ் மணிகண்டனை காப்பாத்தும் நோக்கம் எனக்கு இல்லை.. மகாராஜா பட நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi: மகாராஜா திரைப்படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் நிலையில், விஜய் சேதுபதி, பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், விஜய் சேதுபதியின் 50 படமாக உருவாகி வெளியீட்டுக்குத் தயாராக உள்ள திரைப்படம் மகாராஜா’.  ’தி ரூட்’ நிறுவனம் - பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில், ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஜூன் 14ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு பேசியதாவது:

‘என்னை நம்பிய சீனு ராமசாமி’

நடிகர் விஜய்சேதுபதி, என் இயக்குநர், என் குருநாதர் சீனு ராமசாமி சாருக்கு நன்றி. அவருடைய வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும்போது, என்னை மாதிரி ஒரு ஆள, யாருமே நம்பாத, நானே நம்பாத ஒரு ஆளை வச்சு அந்தப் படத்தின் ஷூட்டிங்க முடிச்சது மிக ஆச்சர்யமான ஒரு விஷயம். அதுக்கு அவருக்கு நன்றி. எனக்கு நடிக்கவே தெரியாதபோது சி.ஜே. பாஸ்கர் எனக்கு சீரியல்ல வாய்ப்பு கொடுத்து, நான் துவண்டு போகும்போது ஒரு நாள் வந்து “உன் கண்ணும் சிரிப்பும் நடிக்கும்போது நல்லா இருக்கு, நீ நல்லா வருவ”னு சொன்னாரு. அவருக்கு நன்றி. எனக்கு உதவி செய்த நிறைய பேருக்கு நன்றி. இந்த 50 படங்களும் ஒரு மாலையாக இருந்தால், அதில் இருக்கும் ஒவ்வொரு மணியும் இங்க இருக்க அத்தனை பேராலும் அது கோர்க்கப்பட்டிருக்கிறது.  என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், பாராட்டுகள் என அனைத்தும் என்னை யோசிக்க தான் வைத்தன.

பாய்ஸ் மணிகண்டனின் நேர்க்காணல் 

துபாயில் நான் வேலை செய்துகொண்டிருக்கும்போது ஃபைவ் ஸ்டார் படத்துக்கும், பாய்ஸ் படத்துக்கும் ஆர்ட்டிஸ்ட் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் என் ஃபோட்டோ அனுப்பினேன். மணிகண்டனை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். ஒருநாள் அவரது சமீபத்திய இண்டர்வியூவை நான் எதேச்சையாக பார்த்தேன்.  வருத்தம் என்னவென்றால், இனிமே இந்த வாழ்க்கை எவ்வளவு பயமுறுத்தினாலும் பயப்பட மாட்டேன்டா என ஒருவர் உணர்ந்தது போல் அந்த இண்டர்வியூ இருந்தது. பெரிய பூதம், பேய் என்றால் அது வாழ்க்கை தான்.

நேற்று இருந்த நொடி இன்று இல்லை. அந்த இண்டர்வியூ அவ்வளவு என்னை ஈர்த்தது. நான் உதவி பண்ணனும் இல்லை காப்பாத்தணும் எனும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை. ரொம்ப சுவாரஸ்யமான நபராக இருந்தார். அதனால் இயக்குநரிடம் அவர் பற்றி சொன்னேன். திறமை இல்லாத யாரையும் வாய்ப்பு கொடுத்து வளர்க்க முடியாது. அது மாதிரி முயற்சி செய்து நான் தோற்றுப்போய் இருக்கிறேன். 

மணிகண்டனைப் பொறுத்தவரை வாழ்க்கையைப் பற்றிய அவரது புரிதல் என்னை மிகவும் ஈர்த்தது. இந்தப் படத்தில் அவருடன் நடித்தது மிகவும் சந்தோஷம்” எனப் பேசியுள்ளார். 2014ஆம் ஆண்டு காதல் 2014 படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் அமையாமல் இருந்த பாய்ஸ் மணிகண்டன், சென்ற ஆண்டு தனியார் ஊடகத்துக்கு அளித்த நேர்க்காணல் வைரலானது.  இந்நிலையில் பகீரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் சென்ற ஆண்டு நடித்த அவர், தற்போது விஜய் சேதுபதியுடன் மகாராஜா படத்தில் நடித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

லிவ் இன் ரிலேஷன்ஷிப்க்கு சிக்கல்! இன்று அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்! எங்கு? என்னவெல்லாம் பிரச்சினை?
லிவ் இன் ரிலேஷன்ஷிப்க்கு சிக்கல்! இன்று அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்! எங்கு? என்னவெல்லாம் பிரச்சினை?
Budget 2025: பழைய வரிமுறைக்கு டாடாவா..! பட்ஜெட்டில் விலக்குகளுடன் அப்டேட் ஆகும் புதிய வரி முறை? மக்களுக்கு என்ன பலன்?
Budget 2025: பழைய வரிமுறைக்கு டாடாவா..! பட்ஜெட்டில் விலக்குகளுடன் அப்டேட் ஆகும் புதிய வரி முறை? மக்களுக்கு என்ன பலன்?
CM Stalin: ”என் கவலையே..” அதிமுகவிற்கு ஒரு குத்து, பாஜகவிற்கு ஒரு குத்து - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: ”என் கவலையே..” அதிமுகவிற்கு ஒரு குத்து, பாஜகவிற்கு ஒரு குத்து - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
GSLV F15: நாடே வெயிட்டிங்..! ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய உள்ள 100வது ராக்கெட் - விஷயம் தெரியுமா?
GSLV F15: நாடே வெயிட்டிங்..! ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய உள்ள 100வது ராக்கெட் - விஷயம் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai |  சென்னை வரும் கிஷன் ரெட்டி! அண்ணாமலைக்கு டிக்? அப்செட்டில் சீனியர்ஸ் | BJP | TNSalem TVK: DMK, ADMK - வுக்கு டஃப் கொடுத்த TVK! மாஸ் காட்டிய சேலம் மா.செ! சம்பவம் செய்த தொண்டர்கள்Mayiladuthurai Cheating Girl : வடிவேல் பட பாணி.. 4 பேரை ஏமாற்றிய இளம்பெண்! சிக்கிய அதிர்ச்சி பின்னணிதனி ரூட்டில் வானதி, நயினார்! அப்செட்டில் அண்ணாமலை! பாஜகவில் வெடிக்கும் சர்ச்சை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லிவ் இன் ரிலேஷன்ஷிப்க்கு சிக்கல்! இன்று அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்! எங்கு? என்னவெல்லாம் பிரச்சினை?
லிவ் இன் ரிலேஷன்ஷிப்க்கு சிக்கல்! இன்று அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்! எங்கு? என்னவெல்லாம் பிரச்சினை?
Budget 2025: பழைய வரிமுறைக்கு டாடாவா..! பட்ஜெட்டில் விலக்குகளுடன் அப்டேட் ஆகும் புதிய வரி முறை? மக்களுக்கு என்ன பலன்?
Budget 2025: பழைய வரிமுறைக்கு டாடாவா..! பட்ஜெட்டில் விலக்குகளுடன் அப்டேட் ஆகும் புதிய வரி முறை? மக்களுக்கு என்ன பலன்?
CM Stalin: ”என் கவலையே..” அதிமுகவிற்கு ஒரு குத்து, பாஜகவிற்கு ஒரு குத்து - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: ”என் கவலையே..” அதிமுகவிற்கு ஒரு குத்து, பாஜகவிற்கு ஒரு குத்து - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
GSLV F15: நாடே வெயிட்டிங்..! ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய உள்ள 100வது ராக்கெட் - விஷயம் தெரியுமா?
GSLV F15: நாடே வெயிட்டிங்..! ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய உள்ள 100வது ராக்கெட் - விஷயம் தெரியுமா?
Today Power Shutdown:  தமிழகத்தில் இன்று ( 27.01.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட்
Today Power Shutdown: தமிழகத்தில் இன்று ( 27.01.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட்
இன்றைய ராசிபலன் 27.01-2025: மகிழ்ச்சியான நாள்...
இன்றைய ராசிபலன் 27.01-2025: மகிழ்ச்சியான நாள்...
மனைவி போட்ட கவர்ச்சி போட்டோ! வசமாக சிக்கிய போதை கும்பல் தலைவன்! எப்படி?
மனைவி போட்ட கவர்ச்சி போட்டோ! வசமாக சிக்கிய போதை கும்பல் தலைவன்! எப்படி?
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
Embed widget