Gold Rate Hike: உன் ஆட்டத்த நிறுத்தவே மாட்டியா.?! புதிய உச்சத்தை நோக்கி உயரத் தொடங்கிய தங்கம்...
கடந்த வார இறுதியில் புதிய உச்ச விலையை தொட்ட தங்கம், அதன் பிறகு சிறிது குறைந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி உயரத் தொடங்கியுள்ளது-

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் விலை உயர்வுதான் காணப்படும். கடந்த வார இறுதியில் 66,000 ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை, சற்று குறைந்த நிலையில், தற்போது மீண்டும் 66 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.
தொடர்ந்து புதிய உச்ச விலையை எட்டிவரும் தங்கத்தின் விலை
கடந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது மார்ச் 10-ம் தேதி, ஒரு சவரன் 64,400 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை, அடுத்த நாள் மட்டும் குறைந்து, அதன் பின்னர் உயரத் தொடங்கியது. 13-ம் தேதி 64,960 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை, வார இறுதியில், அதாவது 14-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று வரலாறு காணாத உச்சமாக, 66,400 ரூபாயை எட்டியது. பின்னர் 15, 16 தேதிகளில் 65,760 ரூபாயாக இருந்த ஒரு சவரனின் விலை, 17-ம் தேதி 65,680 ரூபாயாக உயர்ந்தது. தொடர்ந்து, 18-ம் தேதி, அதாவது நேற்று மீண்டும் உயர்ந்த சவரன் விலை, மீண்டும் 66,000 ரூபாயை எட்டியது. இந்த நிலையில், இன்றும்(19.03.25) விலை உயர்ந்துள்ளது.
புதிய உச்சத்தை நோக்கி உயரும் தங்கத்தின் விலை
அதன்படி, இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 40 ரூபாய் உயர்ந்து 8,290 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்து, சவரன் 66,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை நாளை உயரும் பட்சத்தில், வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டும். இதனால், பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
வெள்ளியின் விலையும் உயர்வு
இதேபோல், வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. மார்ச் 10-ம் தேதி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 108 ரூபாயாக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து, 18-ம் தேதியான நேற்று 113 ரூபாயை எட்டியது. இந்நிலையில், இன்று மீண்டும் 1 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை, 114 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருவதால், இது எங்கு போய் முடியுமோ என் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். தங்கத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தவே முடியாதா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

