Salem TVK: DMK, ADMK - வுக்கு டஃப் கொடுத்த TVK! மாஸ் காட்டிய சேலம் மா.செ! சம்பவம் செய்த தொண்டர்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று சொந்த ஊர் வந்த பார்த்திபனுக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமான முறையில் வரவேற்பு அளித்தனர். குறிப்பாக சேலம் நெய்காரப்பட்டி பகுதியில் ஜேசிபி வாகனத்தின் மூலம் மலர்கள் தூவி, பட்டாசுகள் வெடித்து பிரம்மாண்டமான முறையில் வரவேற்றனர்.
பெரிய அரசியல் கட்சித் தலைவருக்கு கொடுக்கும் வரவேற்பு போல் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு அவருடன் புகைப்படம் எடுப்பதற்கும், வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கும் ஒருவரையொருவர் முந்தி செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே கட்சிக்காக உழைக்கும் அனைவருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தில் சரியான பதவிகள் வழங்கப்படும் சேலம் மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன என்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பார்த்திபன் பேசினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பார்த்திபன், சேலம் மாவட்டம் திமுக, அதிமுக கோட்டையல்ல தமிழக வெற்றி கழகத்தின் கோட்டையாக மாறிவிட்டது. நிச்சயம் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக தலைவர் விஜயை அரியணையில் அமர்த்துவோம் என்றார். மேலும் இறுதியாக தலைவர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், இனி திரையில் அவரை பார்க்க முடியாது என்பது வேதனை அளிப்பதாகவும் கூறினார்.





















