சுனிதா வில்லியம்ஸ் திரும்பியதற்கு டிரம்ப்தான் காரணமா? வெடிக்கும் அரசியல்..உண்மை என்ன?
Sunita Williams - Trump: சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியது டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்தான் காரணம் என்றால், அதிபராக பொறுப்பேற்ற ஜனவரி மாதமே ஏன் அழைத்து வரவில்லை.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9 மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த நிலையில் இன்று அதிகாலை பத்திரமாக பூமி திரும்பினர். இந்நிலையில், விண்வெளி வீரர்கள் பூமி திரும்பியதற்கு டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்தான் காரணம் என அமெரிக்க அரசியலில் கருத்துகள் பரவி வருகிறது. இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் பல நாட்கள் இருந்ததற்கு பைடன் காரணமா,உண்மை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
சுனிதா வில்லியம்ஸ் சென்றது ஏன்?
கடந்த ஆண்டு ஜூன் மாதம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சென்றனர். ஆனால், சுமார் 8 நாட்கள் என பயணம் என திட்டமிடப்பட்ட நிலையில் 9 மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. இதனால், இவர்கள் சிக்கி கொண்டார்கள் என்ற தகவல் பரவியது.

படம் : சர்வதேச விண்வெளி நிலையம், image credits: NASA
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை கொண்டு செல்வதற்காக, எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன், நாசா விண்வெளி நிலையம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி 6 மாதங்களுக்கு ஒரு முறை விண்வெளி வீரர்களை , விண்வெளி நிலையத்திற்குக் கொண்டு சென்று, அங்கிருக்கும் விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதாகும். அதாவது, எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் டிராவல் ஏஜென்சி போன்றுதான். இதே பணியை மேற்கொள்ள போயிங் நிறுவனம் திட்டமிட்டது. அதற்காக, அதனுடைய ஸ்டாரலைனர் விண்கலத்தில் முதல் முறை சோதனை பயணமாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர்
பின்னடைவை சந்தித்த போயிங்:
ஆனால், போயிங்க் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக , 8 நாட்களில் பூமி திரும்பும் பயணமானது தாமதமானது. ஸ்டார்லைனர் விண்கலத்தில் உள்ள கோளாறுகள் சரி செய்ய முயன்றும் , பலனளிக்காத காரணத்தால், விண்கலம் மட்டும் தனியாக பூமி திரும்பியது. இது, போயிங் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
களத்திற்கு வந்த எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ்:
இதையடுத்துதான், 6 மாதத்திற்கு ஒரு முறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, விண்வெளி வீரர்களை அழைத்து வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் விண்கலத்தில், இருவரையும் பூமிக்கு அழைத்து வரலாம் என நாசா திட்டமிட்டது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் க்ரு டிராகன் 9 விண்கலம், 4 பேருக்கு பதிலாக 2 பேருடன் பூமியிலிருந்து புறப்பட்டது. அதாவது, 2 இருக்கைகள் காலியாக சென்றால், வரும்போது சுனிதா வில்லியம்ஸ் மற்று புல்மோர் ஆகிய இருவரையும் அழைத்து வந்துவிடலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், சுனிதா வில்லியம்ஸ்க்கு முன்பாகவே சிலர், விண்வெளி நிலையத்தில் இருந்ததால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதுவும், இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றும்கூட. இதனால், சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் அழைத்துவர அடுத்த 6 மாதம் காத்திருக்க வேண்டும் என கூறப்பட்டது.
இது ஒரு வழக்கமான நடைமுறைதான். மேலும், பல நாட்களுக்கு தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலைக்கும் தயாராக வந்ததாகவும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் தெரிவித்தனர். இந்நிலையில், க்ரு டிராகன் 9 விண்கலம் சென்ற நிலையில், 6 மாதங்கள் கடந்த நிலையில் மார்ச் மாதம் திரும்புவார் என கூறப்பட்டது. அதனடிப்படையில், இன்று காலை ( மார்ச் 19 ) இந்திய நேரப்படி சுமார் 3.30 மணியளவில் பூமி திரும்பினார்கள்.
Splashdown confirmed! #Crew9 is now back on Earth in their @SpaceX Dragon spacecraft. pic.twitter.com/G5tVyqFbAu
— NASA (@NASA) March 18, 2025
வெடிக்கும் அமெரிக்க அரசியல்:
இந்நிலையில்தான், சுனிதா வில்லியம்ஸ் பல நாட்கள் சிக்கி கொண்டதற்கு முந்தைய அதிபர் பைடன்தான் காரணம், அவர்களை அழைத்து வரை நடவடிக்கை எடுக்கவில்லை என தற்போதைய அமரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். மேலும், எலான் மஸ்க்கிடம் , அவர்களை அழைத்து வர சொல்லியிருக்கிறேன், அவரும் சரி என்று கூறியிருக்கிறார் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவர்கள் இருவரும் பூமி திரும்பிய நிலையில், டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்தான் காரணம் என்றும் அமெரிக்க அரசியலில் பேச கருத்துகள் பரவ ஆரம்பித்தன.
டிரம்ப் காரணமா?
சுனிதா வில்லியம்சை அழைத்து வந்தது, எலான் மஸ்க் விண்கலம்தான். ஆனால், இது வழக்கமான நடைமுறைதான். இது நாசா விண்வெளி நிலையத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் அடிப்படையிலானதுதான். அவர், தனிப்பட்ட முயற்சி இல்லை. டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்தான் தனிபட்ட காரணம் என்றால், அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற ஜனவரி மாதமே, ஏன் அழைத்து வரவில்லை. நாசாவுடனான செய்துகொண்ட ஒப்பந்தத்தின் வழக்கமான நடைமுறையை, அரசியலாக மாற்றிவிட்டனர், டிரம்ப் தரப்பினர். இந்நிலையில், பாதுகாப்பாக பூமி திரும்பிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்று புட்ச் வில்மோர் ஆகிய இருவரும், தற்போது சில நாட்கள் நாசாவின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள்.
Welcome home, @AstroHague, @Astro_Suni, Butch, and Aleks! 🌎✨
— NASA Astronauts (@NASA_Astronauts) March 19, 2025
Crew-9 splashed down safely in the water off the coast of Florida near Tallahassee on Tuesday, March 18, 2025.
Hague, Gorbunov, Williams, and Wilmore have returned to Earth from a long-duration science expedition… pic.twitter.com/nWdRqaSTTq
இந்நிலையில், புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் 9 மாதங்களுக்கு மேலாக இருந்த பின்னர், பூமி திரும்பி வருவதால் நடப்பது , பொருள்களை தூக்குவது உள்ளிட்ட இயல்பான வாழ்க்கை வேலைகளில் ஈடுபட சில நாட்களுக்கு சிரமம் என்பதால், மற்றவர்களின் கண்காணிப்பிலேயே இருபார்கள். இதையடுத்து 1 மாதத்திற்குள் நாசாவின் விண்வெளி நிலையத்தில் இருந்து வீடு திரும்பிவிடுவார்கள் என்று தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அமெரிக்க அரசியலானது விண்வெளி வரை சென்றுவிட்டது என்று பேசப்படுகிறது.




















