Mayiladuthurai Cheating Girl : வடிவேல் பட பாணி.. 4 பேரை ஏமாற்றிய இளம்பெண்! சிக்கிய அதிர்ச்சி பின்னணி
சீர்காழியில் பல்வேறு ஆண்களை ஏமாற்றி வடிவேல் பட பாணியில் அடுத்தடுத்த திருமணம் செய்த இளம் பெண்ணை நான்காவது கணவர் அளித்த புகாரில் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் சிலம்பரசன் என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு தர்ஷன் என்ற மகனும் ரேணு என்ற மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிலம்பரசன் உயிரிழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நெப்போலியன் என்பவரிடம் தன்னை செவிலியர் மீரா என அறிமுகம் செய்து கொண்டு காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துள்ளார். பின்னர் அவரை விட்டு பிரிந்து சென்று சிதம்பரத்தை சேர்ந்த ராஜா என்பவரிடம் தனது பெயர் நிஷாந்தினி, தான் MBBS MS படித்துவிட்டு சிதம்பரம் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றிவருவதாக கூறி அவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் சிறிது காலம் வாழ்ந்து விட்டு, பணி நிமித்தமாக தான் கோயம்புத்தூர் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து சீர்காழி திட்டை பகுதியை சேர்ந்த சிவசந்திரன் சிதம்பரம் மெடிக்கல் காலேஜில் தனது தாயாரின் சிகிச்சைக்காக சென்ற போது அங்கு சிவசந்திரன் என்பவருடன் , தான் இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் நிஷாந்தினி எனவும், தனக்கு அம்மா, அப்பா யாரும் இல்லை என கூறி அவருடன் வாட்சப்பில் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி வந்துள்ளார். அதனை தொடர்ந்து சிவசந்திரனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தியுள்ளார். அதனை ஏற்ற சிவசந்திரனை நான்காவது திருமணமாக கடந்த ஜனவரி 20 -ம் தேதி நிஷாந்தினி என்கிற லட்சுமியை திருமணம் செய்துள்ளார்.
அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியான புதுபெண் லட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த திருமண எண்ணிக்கை நான்கு பேருடன் முடிவடைகிறதா? அல்லது மேலும் இது அதிகாரிக்குமா என்பது காவல்துறையினரின் அடுத்து அடுத்த விசாரணையில் தெரிய வரும். இதனிடையே வடிவேலு பட பாணியில் ஒரு பெண் அடுத்தடுத்து நான்கு ஆண்களை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















