Ms Dhoni: வயசானாலும் மாறாத ஸ்டைல்... தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்.. ஷாக்காகி பார்த்த பதிரானா
MS Dhoni:சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சி போட்டியின் போது, தோனி மதிஷா பதிரானாவின் பந்தில் ஒரு அற்புதமான ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025-க்கு தயாராகி வருகிறது, இந்த நிலையில் எம்.எஸ் தோனியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்:
சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சி போட்டியின் போது, தோனி மதிஷா பதிரானாவின் பந்தில் ஒரு அற்புதமான ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்தார். இந்த ஷாட் ரசிகர்களுக்கு தோனிய்ன் பழைய நாட்களை நினைவூட்டியது. பயிற்சிப் போட்டியில் மகேந்திர சிங் தோனிக்கு மதிஷா பதிரானா ஒரு அற்புதமான யார்க்கரை வீசினார், ஆனால் தோனி தனது டிரேட்மார்க் ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸர் அடித்தார். எம்.எஸ். தோனியின் சிக்ஸருக்குப் பிறகு, ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தோனியின் பழைய நாட்களை நினைவு கூர்கின்றனர். தனது ஹெலிகாப்டர் ஷாட் மூலம் பழைய நாட்களை தோனி நினைவூட்டியதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
MS Dhoni with a helicopter shot. 🚁pic.twitter.com/blUh0h4fwy
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 18, 2025
தோனியின் கடைசி ஐபிஎல் தொடரா?
சமீபத்தில், மெகா ஏலத்திற்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியை ரூ.4 கோடிக்கு Uncapped வீரராக தக்க வைத்துக் கொண்டது. இது தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவரின் ஓய்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் எழுந்தாலும், இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒவ்வொரு முறையும் அனைத்து வதந்திகளையும் தனது ஆட்டத்தின் மூல்ம் நிராகரித்து வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. எம்.எஸ். தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் தற்போது ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வருகிறார்.
ஐபிஎல்-லின் சிறந்த கேப்டன்?
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் எம்எஸ் தோனியும் ஒருவர். அவரின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இருப்பினும், இப்போது எம்.எஸ். தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார். மகேந்திர சிங் தோனியைத் தவிர, ரோஹித் சர்மா மட்டுமே கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளார். இருப்பினும், ஒரு கேப்டனாக, ருதுராஜ் கெய்க்வாட் தனது முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனைகளை மீண்டும் செய்ய முடியுமா என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்.
Caption is in the image! 🦁 #WhistlePodu #Yellove🦁💛 pic.twitter.com/YuIb1sXlr9
— Chennai Super Kings (@ChennaiIPL) March 19, 2025
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.