Karthigai Deepam: சந்தோஷத்தில் சாமுண்டீஸ்வரி! மாப்பிள்ளையாக மாறிய கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
karthigai deepam serial: கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதியின் திருமணம் நின்ற நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

karthigai deepam serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி மண்டபத்திற்குள் நுழைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சந்தோஷத்தில் சாமுண்டீஸ்வரி:
அதாவது, கல்யாணம் இன்னும் நடக்கவில்லை என்பதை அறியும் சாமுண்டீஸ்வரி சந்தோஷமடைகிறாள். அய்யரிடம் அடித்த முகூர்த்தம் எப்போது என்று கேட்க இன்னும் 2 மணி நேரத்தில் முகூர்த்தம் இருப்பதாக சொல்கிறார். சாமுண்டீஸ்வரி அப்போது கல்யாணத்தை வைத்து கொள்ளலாம் என்று சொல்கிறாள்.
இதனை தொடர்ந்து மாயா, சந்திரகலா டீம் ஒரு பக்கம் இப்போ என்ன செய்வது என ஆலோசிக்க மறுபக்கம் பரமேஸ்வரி பாட்டி, ராஜராஜன் மற்றும் மயில் வாகனம் ஆகியோர் அடுத்து என்ன செய்வது? என பேசுகின்றனர்.
என் வீட்டு மாப்பிள்ளை:
கார்த்திக் டாக்டர் மல்லிகாவை பார்க்க வீட்டிற்கு வர அவரது வீட்டு வேலைக்காரி டாக்டர் பெங்களூர் சென்றிருப்பதாக சொல்லி சமாளிக்கிறாள். கார்த்திக் மல்லிகா டாக்டருக்கு போன் செய்ய டாக்டர் போனை எடுக்காத காரணத்தால் அங்கிருந்து கிளம்பி வருகிறான்.
பிறகு வீட்டிற்குள் மறைந்திருந்த மல்லிகா சாமுண்டீஸ்வரிக்கு விஷயத்தை சொல்கிறாள். உனக்கு நல்ல பையன் டிரைவராக கிடைத்து இருக்கான் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி ட்ரைவர் மட்டுமில்ல என் வீட்டு மாப்பிள்ளையும் அவன் தான் என்று சொல்ல மல்லிகா நல்ல முடிவு என சந்தோசப்படுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

