மனைவி போட்ட கவர்ச்சி போட்டோ! வசமாக சிக்கிய போதை கும்பல் தலைவன்! எப்படி?
நீண்ட நாட்களாக போலீசின் கண்ணில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார் லூயிஸ்.

அமெரிக்காவில் நீண்ட நாட்களாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த போதை பொருள் கும்பல் தலைவன் மனைவி போட்ட கவர்ச்சி புகைப்படங்களால் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் போதை பொருள் கடத்தலுக்கு பெயர் போனவர் லூயிஸ் கிரிஜல்பா. 43 வயதாகும் இவர் போதை பொருள் கடல்த்தல் கும்பல் தலைவனாகவும் செயல்பட்டு வருகிறார். கோஸ்டா ரிக்காவில் இருந்து கொக்கைன் என்ற போதை பொருளை ஏற்றுமதி செய்வதால் இவருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதி செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
நீண்ட நாட்களாக போலீசின் கண்ணில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார் லூயிஸ்.
இந்நிலையில் தான் இவரது மனைவி எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை அவரது சமூக வலைதளங்களில் பதிவிட்டதன் மூலம் கணவர் லூயிஸ் போலீசிடம் சிக்கியுள்ளார்.
லூயிஸ், மனைவி எஸ்தபானியா மெக்டோனால்டு ரோட்ரிகீஸுடன் பாரிஸ்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஈபிள் கோபுரம் முன்பு மனைவியுடன் புகைப்படங்கள் எடுத்துகொண்டுள்ளார். வழக்கமாக மனைவியுடன் அதிக நேரம் செலவிடாத லூயிஸ் இந்த முறை அதிக நேரம் செலவிட்டுள்ளார்.
கவர்ச்சி உடையில் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்த எஸ்தபானியா இந்த முறை கணவருடனும் இணைந்து புகைப்படங்கள் எடுத்து தனது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இதை நோட்டமிட்ட தேசிய குற்ற புலனாய்வு முகமை அதிகாரிகள் லூயிஸை சுத்துப்போட்டு கைது செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “லூய்ஸ் எப்போதும் வெளிநாடு சுற்றுலா செல்வது வழக்கம். அப்போது தனியாகத் தான் செல்வார். மனைவியை விட்டு இருக்கக்கூடியவர். ஆனால் இந்த முறை மனைவியுடன் அதிக நேரம் செலவிட்டு உள்ளார். அதனால்தான் அவர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
கொலம்பியா, ஐரோப்பிய நாடுகளுக்கு லூயிஸ் மனைவியுடன் சென்றுள்ளார். சுற்றுலா ஸ்தலங்களில் புகைப்படங்கள் எடுத்து வைத்துள்ளனர். அதை அவரது மனைவி சமூக ஊடகங்களில் பதிவிட்டார். பல மாதங்களாக லூயிஸின் மனைவியை பின் தொடர்ந்தோம். இந்த முறை அதற்கு பலனாக வசமாக சிக்கியுள்ளார்.
லூயிஸ் மீது 2 படுகொலை முயற்சிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தனர்.





















