Annamalai | சென்னை வரும் கிஷன் ரெட்டி! அண்ணாமலைக்கு டிக்? அப்செட்டில் சீனியர்ஸ் | BJP | TN
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி இன்று சென்னைவர உள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார்? அண்ணாமலைக்கு மீண்டும் பதவி கிடைக்குமா? இல்லை ஓரங்கட்டப்படுவாரா என்பது தொடர்பான சீக்ரெட் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் IPS அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தர். அடுத்த ஆண்டே தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றார். அரசியல் களத்தில் திமுகவை கடுமையாக அண்ணாமலை எடுத்து வருகிறார்.
மறுபுறம் கூட்டணியில் இருந்த அதிமுக அக்கூட்டணியை விட்டு வெளியேறியதற்கு அண்ணாமலையின் ஓவர்பிரசங்கி தனம் தான் காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனிடையே வரும் 2026 சட்டமன்றதேர்தலில் மீண்டும் பாஜக கூட்டணியில் அதிமுக இணையுமா என்ற விவாதமும் நடந்துகொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் தான் பாஜகவில் நடைபெற்று வரும் உட்கட்சித்தேர்தலில் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழும்பியுள்ளது.
இந்த ரேசில் பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவான் உள்ளிட்டோர் இருப்பதாக தகவல் வெளியானது.
இச்சூழலில் தான் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அண்ணாமலையே மீண்டும் தலைவராக அறிவிக்கப்படலாம் என்றும் அவர் இல்லையென்றால் யாரும் எதிர்பார்க்காத ஒரு நபரை சர்ப்ரைசாக பாஜக அறிவிக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.





















