ஹைப்பர்லூப் ரயில் ரெம்ப ஸ்பீடா இருக்கும்! சென்னை ஐஐடி_க்கு நிதி ஒதுக்கீடு- ரயில்வே அமைச்சகம் அப்டேட்
ஹைப்பர்லூப் ரயில் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையத்தை அமைப்பதற்காக சென்னை ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் ரயில் போக்குவரத்தானது மற்ற போக்குவரத்து முறைகளை விட விரைவாகவும், அதிக ஆற்றல் திறன் கொண்டதாகவும், நிலையானதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்:
டெல்லியில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் ஹைப்பர்லூப் ரயில் தொழில்நுட்பம் குறித்து, கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு எழுத்து மூலம் மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.
அதில் தெரிவிக்கப்பட்டதாவது, ஹைப்பர்லூப் என்பது ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகும். இது வளர்ச்சியின் தொடக்க கட்டத்தில் உள்ளது. ஹைப்பர்லூப்பின் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அளவுருக்கள் இன்னும் உலகளவில் வடிவமைக்கப்படவில்லை.
சென்னை ஐஐடி-ரயில்வே ஒப்பந்தம்:
Longest Hyperloop tube in Asia (410 m)… soon to be the world’s longest.@iitmadras pic.twitter.com/kYknzfO38l
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) March 16, 2025
ஹைப்பர்லூப் மற்ற போக்குவரத்து முறைகளை விட விரைவாகவும், அதிக ஆற்றல் திறன் கொண்டதாகவும், நிலையானதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு ரூ.20.89 கோடி நிதியுதவியுடன் இந்த தொழில்நுட்பம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையத்தை அமைப்பதற்காக சென்னை ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்கள்:
இதை தொடர்ந்து, அசாம் மாநிலம் உட்பட வடகிழக்கு பிராந்தியத்தில் 2,499 கி.மீ தொலைவிற்கு புதிய ரயில் வழித்தடங்கள் அல்லது ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குவது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும், கவாச் பாதுகாப்பு முறையை அமைக்கும் பணிகளில், இதுவரை 1950 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டிற்கு 1112.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

