மேலும் அறிய

எங்களுக்கு அவங்கதான் வேணும்... போராட்டக்களத்தில் இறங்கிய மாணவ, மாணவிகள் - எதற்காக தெரியுமா?

மாணவ, மாணவிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வந்துள்ளார். தன் சொந்த மகன், மகள் போல் பாவித்து மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக பார்த்து கொண்டுள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேம்பாலம் பார்வை திறன் குறையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி பெண் வார்டனை மாற்றியதை கண்டித்து 150 மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மீண்டும் அவரே இங்கு வார்டனாக செயல்பட வேண்டும். இல்லாவிடில் தேர்வுகளை புறக்கணிப்போம் என்று மாணவ, மாணவிகள் தரப்பில் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வை திறன் குறை உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 100 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இப்பள்ளியுடன் விடுதியும் இணைந்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே பார்வைத் திறன் குறையுடையோருக்கான மாணவ, மாணவிகள் தங்கி படிக்கும் ஒரே பள்ளி இதுதான்.


எங்களுக்கு அவங்கதான் வேணும்... போராட்டக்களத்தில் இறங்கிய மாணவ, மாணவிகள் - எதற்காக தெரியுமா?

இங்கு கடந்த 6 ஆண்டுகளாக வைரவல்லி (40)  என்பவர் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர் மாணவ, மாணவிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வந்துள்ளார். தன் சொந்த மகன், மகள் போல் பாவித்து மாணவ மாணவிகளை பாதுகாப்பாக பார்த்து கொண்டுள்ளார். இதனால் மாணவ, மாணவிகளுக்கு வைரவல்லி மீது மிகுந்த பாசம் இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் வார்டனாக பணியாற்றி வந்த அனிதா (40)  என்பவரை தற்போது இப்பள்ளிக்கு வார்டனாக மாற்றம் செய்து உள்ளனர்.

வைரவல்லியை திருச்சிக்கு மாற்றம் செய்து உள்ளனர். இத்தகவல் அறிந்த மாணவ, மாணவிகள் நேற்று இரவு முதல் சாப்பிடாமல் போராட்டம் செய்துள்ளனர். வார்டன் வைரவல்லியை மாற்றம் செய்யக்கூடாது என தெரிவித்து சாப்பிடாமல் இருந்து வந்த நிலையில் மாணவ, மாணவிகளை சமாதானப்படுத்தி பள்ளி ஆசிரியர்கள் சாப்பிட வைத்துள்ளனர்.

இருப்பினும் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து 150 மாணவ, மாணவிகளும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து வார்டன் வைரவல்லியை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகள் தரப்பில் கூறுகையில், வார்டன் வைரவல்லியை பணியிட மாற்றம் செய்தால் தேர்வுகள் எழுதாமல் புறக்கணிப்போம். கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வரும் வைரவல்லி எங்களுக்கு அப்பா, அம்மா போன்று மிகுந்த பாதுகாப்புடன் இருந்து வந்தார். எங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களிலும் அவர் உறுதுணையாக இருந்து வந்தார். அவர் போன்று வேறு யாரும் இருக்க முடியாது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை மிகுந்த அக்கறையுடன் பார்த்து கொள்வார்.

இந்நிலையில் அவரைப் பணியிட மாற்றம் செய்துள்ளனர். இந்த பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். அவரே மீண்டும் இங்கு வார்டனாக பணியாற்ற வேண்டும். இல்லாவிடில் நாங்கள் தேர்வுகளை புறக்கணிப்போம். இங்கு எங்களுக்கு அம்மா, அப்பா, நண்பர் போல் இருந்தவர் அவர். எங்களுக்கு தேவையானவற்றை செய்து தருவார். அவரை போன்ற வார்டன் எங்களுக்கு கிடைக்க மாட்டார்கள். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரே இங்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் வந்து அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் அவ்வழியாக சென்ற தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாணவ, மாணவிகள் பள்ளியை விட்டு வெளியில் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு உடனடியாக அங்கு சென்று விசாரித்தார். அப்போது மாணவ, மாணவிகள் தங்கள் கோரிக்கை குறித்து அவரிடம் தெரிவித்தனர். உடன் அவர் நீங்கள் சாப்பிடாமல் இருக்கக்கூடாது. அனைவரும் சென்று சாப்பிடுங்கள். அதிகாரிகளிடம் உங்களின் கோரிக்கை குறித்து நான் தெரிவிக்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வெயிலில் அமர்ந்து இருக்கக்கூடாது என்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை கூறினார். இதை ஏற்ற மாணவ, மாணவிகள் அங்கிருந்து எழுந்து பள்ளிக்கு திரும்பினர்.

இதுகுறித்து மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், வெயில் நேரத்தில் இவர்கள் இவ்வாறு வெளியில் அமர்ந்திருப்பது வேதனையை ஏற்படுத்தியது. எங்களுக்கு இது தொடர்பில்லாத விஷயமாக இருந்தாலும் மாணவ, மாணவிகள் நலனில் அக்கறை உள்ளது. அவர்களை சமாதானப்படுத்தி அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தேன். இதையடுத்து மாணவ, மாணவிகள் அங்கிருந்து எழுந்து பள்ளிக்கு சென்றனர். மாணவ, மாணவிகளின் இந்த போராட்டம் குறித்து உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

பார்வைத்திறன் குறையுடைய மாணவ, மாணவிகளை தன் சொந்த பிள்ளைகளை போல் பார்த்துக் கொண்ட வார்டன் வைரவல்லி பெயருக்கு ஏற்றார்போல் வைரமாக ஜொலித்து இருக்கிறார் என்பது மாணவ, மாணவிகளின் ஆதங்கத்திலிருந்து தெரிகிறது. அந்தளவிற்கு அவர் மாணவ, மாணவிகள் பாதுகாப்பில் அக்கறை கொண்டு இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு
தஞ்சையில் சூரியனுக்கு இன்று ‘ஹீட்’ ஏறிடுச்சு! 38 டிகிரி வெப்பம்... ஏசி காற்று கூட செம சூடு
தஞ்சையில் சூரியனுக்கு இன்று ‘ஹீட்’ ஏறிடுச்சு! 38 டிகிரி வெப்பம்... ஏசி காற்று கூட செம சூடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
Embed widget