Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியுடனான புகைப்படங்களை நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக சமீப காலத்தில் தகவல்கள் பரவின. இது தொடர்பாக கணவன் மனைவி இரு தரப்பிலும் எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் ரசிகர்களிடம் குழப்பம் நீடித்தது. தற்போது ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவர் ஜெயம் ரவியுடனான புகைப்படங்களை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
சமீபத்தில் ஜெயம் ரவி திரையுலகிற்கு வந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்த்தி பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இருவரும் சேர்ந்து தான் இருப்பார்கள் என்று ஆறுதலடைந்தார்கள். ஆனால் தற்போது இந்த தகவல் மேலும் குழப்பத்தையே அதிகரித்துள்ளது.
சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி தங்கள் விவாகரத்து பெற்றுக் கொள்ளப் போவதை அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கத்.