"அப்பா, உங்களுக்கு பெருமையை கொடுத்தேனா” : இப்படி ஒரு மகளா.. மகேஷ் பாபுவின் மகளுக்கு ஒரு இண்ட்ரோ
9 வயதாகும் மகேஷ் பாபுவின் மகள் சிதாரா யூடியூம் , இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவ்.
![Famous Star Kid: Mahesh Babu is a 'proud dad' as Sitara makes debut with Sarkaru Vaari Paata's Penny song](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/20/0f44bb5bad409bdc74afae39937f263a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் மகேஷ்பாபுவிற்கு தெலுங்கில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. மிகப்பெரிய ஸ்டாராக இருந்த போதிலும் மகேஷ்பாபு தனது மனைவி , குழந்தைகள் என அவர்களுடன் நேரம் செலவிடுவதை தவறுவதே கிடையாது. அவ்வபோது அவர் பதிவிடும் சமூக வலைத்தள பதிவுகள் மூலம் இதனை நம்மால் நன்கு அறிந்துக்கொள்ள முடிகிறது. இந்த நிலையில்தான் மகேஷ் பாபு வீட்டில் அடுத்த நட்சத்திரம் ஜொலிக்க தொடங்கியிருக்கிறது. 9 வயதாகும் மகேஷ் பாபுவின் மகள் சிதாரா யூடியூம் , இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவ். நடனம் ஆடிவது நடிப்பது ஓவியம் வரைவது என கையில் பல கலைகளை வைத்திருக்கிறார் சித்தாரா.
இவருக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் சிதாரா மகேஷ் பாபுவின் அடுத்த படமான சர்க்காரு வாரிபாடா படத்தில் அறிமுகமாகவுள்ளார். பாடல் ஒன்றுக்கு சிதாரா தனது தந்தை மகேஷ்பாபுவிடன் இணைந்து நடனமாடியுள்ளாது. பென்னி என்னும் அந்த பாடம் தற்போது வெளியாகி, அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. இது குறித்து பதிவிட்ட மகேஷ்பாபு “அவள் மீண்டும் ஷோவை தன்வசமாக்கிவிட்டாள் “ என பெருமிதமாக பகிர்ந்திருக்கிறார்.
She's stealing the show... once again!! 😎#Penny out tomorrow!https://t.co/g2uXcd3i8F@KeerthyOfficial @ParasuramPetla @MusicThaman @14ReelsPlus @GMBents @MythriOfficial @saregamasouth
— Mahesh Babu (@urstrulyMahesh) March 19, 2022
சித்தாராவிற்கு நடனம் ஒன்றும் புதிதல்ல ..அவ்வபோது தனது சமூக வலைத்தளங்களில் தோழிகளுடன் இணைந்து நடமாடி பதிவிட்டு வருகிறார். பென்னி பாடலில் நடமாடியது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த சிதாரா, ”நான் உங்களை பெருமைப்படுத்தியிருப்பேன்னு நம்புறேன் அப்பா “ என மகேஷ் பாபுவை டேக் செய்திருக்கிறார்.
View this post on Instagram
இதற்கு கீழே கமெண்ட் செய்த நடன இயக்குநர் அன்னே மாஸ்டர் , ராக் ஸ்டார் என குறிப்பிட , ரிப்ளை செய்த சிதாரா என்னுடைய முதல் அறிமுகத்தை சிறப்பாக்கியதற்கு நன்றி மேடம் என கமெண்ட் செய்திருக்கிறார். இதன் மூலம் சிதாரா அடுத்தடுத்த படங்களில் எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)