Trisha in TVK.?: 10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
அடுத்த 10 வருடங்களில் நான் முதலமைச்சர் ஆகி காட்டுறேன் என முன்பே ஒரு பேட்டியில் நடிகை த்ரிஷா கூறியது, தற்போது வைரலாகி வருகிறது. தவெக மூலம் அதை நிறைவேற்றப் போகிறாரா என இணையத்தில் கேள்வி எழுந்துள்ளது.

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகை த்ரிஷா
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனியாக ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளவர் நடிகை த்ரிஷா. கோடிகளில் சம்பளம் வாங்கி, முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து, இந்திய அளவில் அறியப்பட்ட கதாநாயகியான த்ரிஷா 25 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமான கதாநாயகியாக உள்ளார். இடையில் சிறிது காலம் ஹிட் கொடுக்காத த்ரிஷாவிற்கு, 96 படம் மறுவாழ்வு அளித்தது. அதைத் தொடர்ந்து தற்போது, முன்னணி ஹீரோக்களுக்கு அவர் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த வரும், விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப், சூர்யா 45 என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. 41 வயதிலும் இளமை மாறாமல் இருக்கும் அவருக்கு, இன்னமும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
தவெக-வில் இணைகிறாரா த்ரிஷா.?
இந்த நிலையில், நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலகப்போவதாக ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அவர் முன்பு அளித்துள்ள ஒரு பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், CM ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. நீங்க வேணா பாருங்க 10 வருஷத்துல CM ஆகி காட்டுகிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார். அவரது அந்த கனவை, தற்போது விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் மூலம் நிறைவேற்றிக்கொள்ளப் போகிறாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஏற்கனவே, சமீப காலமாக விஜய்யுடன் இணைத்து பேசப்பட்ட த்ரிஷா, தவெக-வில் இணைந்து, தனது அரசியல் பயணத்தை தொடங்கப் போவதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. இன்னும் கொஞ்சம் மேல போய், விஜய் தவெக-வில் த்ரிஷாவுக்கு முக்கிய பதவி கொடுக்க போவதாகவும், புஸ்ஸி ஆனந்த்தின் பதவி காலி எனவும் வதந்திகள் பரவி வருகின்றன.
த்ரிஷாவின் தாயார் விளக்கம்
இது ஒருபுறமிருக்க, திரிஷா அரசியலுக்கு வரப்போவதில்லை, உயிர் இருக்கும் வரை அவர் சினிமாவில் தான் இருப்பார் எனவும், அது தொடர்பாக பரவிவரும் செய்திகள் எதுவும் உணமையில்லை எனவும் த்ரிஷாவின் தாயார் தெரிவித்துள்ளாராம். கத்திரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகனும். வெயிட் பண்ணி பார்ப்போம்.

