Annamalai vs Nainar Nagendran | ”மோதி பாக்கலாம் வா”அ.மலை Vs நயினார்! தமிழக பாஜக தலைவர் யார்? | BJP
தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரனுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் உட்கட்சி பூசல் வெளியே வந்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய தலைவராக இருக்கும் அண்ணாமலையையே மீண்டும் டெல்லி தலைமை தலைவராக நியமிக்கப்போகிறாதா இல்லை புதிய தலைவரை நியமிக்க உள்ளதா என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. கடந்த காலங்களில் பாஜக தலைவர்களாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரெல்லாம் இரண்டாவது முறையாகவும் தலைவர்கள் ஆகியிருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் அண்ணாமலையை தான் மீண்டும் தமிழக பாஜக தலைவராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம் தலைவர் ரேசில் தங்களது சோர்ஸை வைத்து நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் டெல்லி பாஜவிற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக பாஜகாவின் தென் மாவட்ட முகமான நயினார் நாகேந்திரன் இந்த முறை எப்படியாவது பாஜக தலைவராக வேண்டும் என்று முனைப்பில் காய் நகர்த்துகிறார். அதற்கு முக்கிய காரணம் அதிமுகவில் பயணித்தவர் அதோடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி உள்ளிட்ட முக்கிய தலைகளுக்கு பர்ஸ்னலாகவே நெருக்கமானவர்.
இதை காரணம் காட்டி அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியை என்னால் உறுதி செய்ய முடியும் என்று டெல்லிக்கு hint கொடுத்திருக்கிறார். பாஜக டெல்லி தலைமையும் அதிமுக கூட்டணியைத் தான் விரும்புவதாக சொல்லப்படுகிறது.
இச்சூழலில் தான் கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நயினாரிடம் , அதிமுக பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமியின் உறவினர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு நெருக்கடி கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருவதாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கூட்டணி குறித்து மதிப்பிற்குரிய அண்ணன் இபிஎஸ் யிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி வரும். ரெய்டு நடப்பதற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ரெய்டு அவர் வீட்டில் மட்டும் இல்லை எல்லோருடைய வீட்டிலும் தான் நடக்கிறது”என்று கூறினார்.
அதிமுக கூட்டணி தொடர்பாக நயினார் நகேந்திரன் சொன்னதை பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வியாக செய்தியாளர் கேட்க,” ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் அண்ணனுக்கு அதிகாரம் இல்லை. அடுத்த கேள்வியை கேளுங்கள்”என்று காட்டமாக அண்ணாமலை கூற கடந்த சில நாட்களாக ஆறிப்போய்கிடந்த உட்கட்சி பூசால் மீண்டும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று கூறப்படுகிறது. அண்ணாமலைக்கும், நயினார் நகேந்திரனுக்கும் இடையே இப்படி வார்த்தை மோதல் ஏற்ப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.





















