EPS Condemn: 'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
சென்னையில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள இபிஎஸ், ஆட்சியாளர்கள் காப்பாற்றுவார்கள் என்பதால் பல 'SIR' கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துவதாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் 3 பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இச்சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும், வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி மாணவிகள் மீது அரங்கேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமை
சென்னையை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை காணவில்லை என, திரு.வி.க நகர் போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, சிறுமியை தேடிய போலீசார், செல்போன் சிக்னலை வைத்து, அவர் வீனஸ் நகரில் இருப்பதை உறுதி செய்து, அங்கு சென்றனர். அப்போது, அந்த சிறுமி தனது காதலனுடன் தங்கியிருந்தது தெரியவந்தது. அதோடு, மேலும் 2 சிறுமிகளும் அவரவர்களது காதலர்களோட தங்கியிருந்ததையும் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, சிறுமிகளை மீட்ட போலீசார், அவர்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, 3 காதலர்களையும் கைது செய்தனர். அதில், கைதான கரிமுல்லா என்பவர் மீது ஏற்கனவே 11 வழக்குகளும், அபிஷேக் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவன் மீதும் தலா 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவியதாக மேலும் மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரசை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி ட்வீட்
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த 3 சிறுமிகளை, 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும், உடந்தையாக இருந்தவர்கள் மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக செய்திகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது, அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டுவந்தால்தான் குற்றம் செய்பவர்கள் அஞ்சுவார்கள் என்பதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உணர வேண்டும் என கூறியுள்ளார்.
அதோடு, 'SIR'கள் போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் தான், தமிழ்நாட்டில் பல 'SIR'கள் பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாகவும், அதை கண்டிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இந்த வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.
சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று , சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) January 27, 2025
இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதாகியுள்ள நிலையில்,…
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

