சென்னையில் இல்லாத ஸ்கூலா..??? மும்பையில் எவ்வளவு செலவு பண்ணுறாரு தெரியுமா?
நடிகர் சூர்யா தனது மகள் தியாவின் படிப்பிற்காக வருடத்திற்கு எத்தனை லட்சம் செலவு செய்கிறார் தெரியுமா ?

சூர்யா
கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான சூர்யா கடந்த ஆண்டு தனது குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார். மும்பையில் 70 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை சூர்யா மற்றும் ஜோதிகா விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சூர்யாவை அவரது பெற்றோர்களை விட்டு பிரித்து ஜோதிகா கூட்டிச் சென்றதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவின. இதுகுறித்து சூர்யா கூறுகையில்
" ஜோதிகா தன் 18 வயதில் சென்னைக்கு குடிபெயர்ந்தார். 27 வருடங்கள் எனக்காக என் குடும்பத்துடன் சென்னையில் இருந்தார். தன் நண்பர்கள், பெற்றோர்கள் எல்லாத்தையும் விட்டு எனக்காக அவர் சென்னை வந்து இருந்தார் . ஒரு ஆணுக்கு என்னவெல்லாம் தேவையோ அது எல்லாமும் ஒரு பெண்ணுக்கும் தேவை. அவருக்கு அவருடைய குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதை நான் தாமதமாக தான் புரிந்துகொண்டேன். என் குழந்தைகள் தற்போது ஐபி பள்ளியில் படித்து வருகிறார்கள். சென்னையில் மொத்தமே இரண்டு ஐபி பள்ளிகள் மட்டுமே இருக்கின்றன. மும்பையில் நிறைய ஐ.பி பள்ளிகள் இருக்கின்றன. இங்கு என் குழந்தைகளுக்கும் நல்ல கல்வி வாய்ப்புகள் இருக்கின்றன . " என தெரிவித்திருந்தார்
சூர்யாவின் மகள் ஸ்கூல் ஃபீஸ்
நடிப்பு தவிர்த்து தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார் சூர்யா. அகரம் ஃபவுண்டேஷன் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா சென்னை தியாகராய நகரில் சமீபத்தில் நடைபெற்றது. அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக இதுவரையில் கிட்டத்தட்ட 5813 மாணவ, மாணவிகள் படித்துள்ளனர். தற்போது 2000க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
சூர்யாவின் மூத்த மகள் தியா தற்போது மும்பையில் படித்து வருகிறார். 12 ஆம் வகுப்பில் அவர் 600 க்கு 581 மதிப்பெண்கள் பெற்றார். மேலும் சினிமாத் துறையில் பணியாற்றும் பெண்களைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தையும் அவர் இயக்கியுள்ளார். மும்பையில் பாந்திராவில் உள்ள அஸெண்ட் இண்டர்நேஷ்னல் பள்ளியில் சூர்யாவின் மகள் இரு ஆண்டு டிப்ளமா படித்து வருகிறார். இப்பள்ளியில் வருடத்திற்கு 13 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஓடிடியில் ரெட்ரோ
சூர்யா நடித்து கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இன்று மே 30 ஆம் தேதி ரெட்ரோ திரைப்படம் நெட்ஃளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்கத்தைத் தொடர்ந்து ஓடிடியிலும் ரெட்ரோ படத்திற்கு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்து வருகிறது

