WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
WhatsApp New Update: செல்போன்ல மெசேஜ் அனுப்ப பெரும்பாலும் வாட்ஸ் அப்பதான மக்கள் பயன்படுத்துறாங்க. ஆனா, ஒரு நம்பர மட்டும்தான் அதுல பயன்படுத்த முடியும். ஆனா, அந்த பிரச்னைய தீர்க்க புது அப்டேட் வருது.

உலகம் முழுக்கவே, செல்போன் பயன்படுத்துறவங்கள்ல பெரும்பாலானோர், உடனடியா தகவல்கள பரிமாற வாட்ட்ஸஅப்ப தான் பயன்படுத்துறாங்க. இப்பல்லாம் ஒரே செல்போன்ல 2 நம்பர்கள் பயன்படுத்துற மாதிரிதான் மாடல்கள் வருது. ஆனா, ஒரு நம்பர்ல மட்டும்தான் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும். இன்னொரு நம்பருக்கு, வாட்ஸ்அப்ப க்ளோன் பண்ணி பயன்படுத்தனும். ஆனாலும் அது ஒரு அசௌகர்யமான விஷயம்தான். இந்த பிரச்னைய தீர்க்குறதுக்கு இப்போ ஒரு புது அப்டேட் வரப்போகுது.
ஒரே வாட்ஸ்அப்பில் பல கணக்குகளை பயன்படுத்தலாம்
வாட்ஸ்அப் கொண்டுவரும் புதிய அம்சத்தின்படி, ஒரே செயலியில் பல கணக்குகளை வைத்துக்கொள்ளலாம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இருப்பதுபோல் இந்த புதிய அப்டேட் வருகிறது. அதன்படி, ஒவ்வொரு வாட்ஸ்அப் கணக்கிற்கும் தனித்தனி Chats, BackUp மற்றும் செட்டிங்ஸ் இருக்கும். அதனால், எந்த குழப்பமுமின்றி பல கணக்குகளை பயன்படுத்தலாம்.
அது மட்டுமின்றி, வாட்ஸ்அப் கணக்கை மெட்டாவுடன் இணைக்கும் அம்சமும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதனால், உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை ஒரே கிளிக்கில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவிற்கு பகிரலாம்.
இந்த அப்டேட் தற்போது ஐஃபோனில் முதலில் சோதிக்கப்பட்டு வருகிறது. ஐஃபோனின் புதிய அப்டேட் மூலம் அதன் பயனாளர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும். இந்த சோதனை மேலும் விரிவுபடுத்தப்பட்டு, அனைத்து செல்போன்களிலும் பயன்படுத்தும் வகையில் அப்டேட் வெளியிடப்படும்.
இந்த செய்தி தற்போது, இந்தியாவில் உள்ள 50 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

