Saif Ali Khan Attacker | ’’கல்யாணம் நின்னு போச்சு..’’போலீசால் கதறும் நபர் சைஃப் அலிகான் விவகாரம் | Akash Kanojia
ராகுல்காந்தி நேர்மையற்ற தலைவர் என இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மியே போஸ்டர் அடித்துள்ளது காங்கிரஸ் கட்சியினருக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ள்ளது. டெல்லியில் ராகுல்காந்தியை குறிவைத்தே கூட்டணியினர் வேலை பார்த்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தேசிய அளவிலான கூட்டணியில் இருந்தாலும் டெல்லி சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்காமல் நேருக்கு நேர் மோதுகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுப்பதாக சொல்லியுள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆம் ஆத்மியின் தேர்தல் வேலைகள் அனைத்தும் காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலேயே இருக்கின்றன. அதுவும் இந்தியா கூட்டணியினரின் வாக்குகள் கெஜ்ரிவால் பக்கமே செல்ல வாய்ப்பிருப்பதால் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக சொல்கின்றனர்.
தேர்தல் நெருங்கும் நிலையில் ராகுல்காந்தியை நேரடியாக அட்டாக் செய்து ஆம் ஆத்மி கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேர்மையற்ற தலைவர்கள் என வெளியிட்ட போஸ்டரில் பிரதமர் மோடி, அமித்ஷா வரிசையில் ராகுல்காந்தி பெயரும் இடம்பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சியினருக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ளது.
அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு தைரியம் இருந்தால், அவர் இந்தியா கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும் என்றும் மக்களவை தேர்தலின் போது கூட்டணிக்காக அவர் ராகுல்காந்தியிடம் கெஞ்சியதாகவும் கல்காஜி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா ஆவேசமாக பேசியுள்ளார்.
ஏற்கனவே இந்தியா கூட்டணியினர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுத்தது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “இந்தியா கூட்டணியினரின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு தியாகம் செய்துள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என அதிருப்தி தெரிவித்திருந்தார்.
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, ராகுல்காந்தியை குறிவைத்து கூட்டணிக்குள் விரிசல் விழுந்து வருவது பாஜகவினரின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது. இந்த விஷயத்தில் ராகுல்காந்தி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





















