Diwali Movies on TV: ஜெயிலர் முதல் போர் தொழில் வரை.. தீபாவளி சரவெடியாய் டிவியில் ஒளிபரப்பாகும் படங்களின் லிஸ்ட்!
Diwali Special Movies: இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகின்றன எனப் பார்க்கலாம்!
![Diwali Movies on TV: ஜெயிலர் முதல் போர் தொழில் வரை.. தீபாவளி சரவெடியாய் டிவியில் ஒளிபரப்பாகும் படங்களின் லிஸ்ட்! Diwali 2023 Movies goig to air in popular tamil channels jailer varisu por thozhil Diwali Movies on TV: ஜெயிலர் முதல் போர் தொழில் வரை.. தீபாவளி சரவெடியாய் டிவியில் ஒளிபரப்பாகும் படங்களின் லிஸ்ட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/11/42071d3a893981ed17b4774dbe4605d21699687254644574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தீபாவளி என்றாலே புதுத்துணி, பட்டாசு பெட்டியுடன் தங்கள் பண்டிகை விடுமுறை நாளை குழந்தைகள் ஒரு பக்கம் உற்சாகத்துடன் ஆட்டம் பாட்டமாகக் கொண்டாட, மறுபக்கம் பெரியவர்கள் ஆற அமர தீபாவளி விருந்து சமைத்து, பலகாரம் செய்து முடித்த கையுடன் உஸ்ஸப்பா.. என தங்கள் ஒரே ஒரு நாள் விடுமுறையை தொலைக்காட்சிப் பெட்டியுடன் இளைப்பாற அமர்வது வழக்கம்!
இன்னைக்கு டிவியில் என்ன படம் போடப்போகிறார்கள் என ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் ரிமோட்டும் கையுமாக குடும்பத்துடன் அமர்ந்து தங்கள் தீபாவளியை எளிமையான முறையில் சினிமா பிரியர்கள் ஸ்பெஷல் ஆக்குவார்கள்.
அந்த வகையில் இவர்களது நாளை சிறப்பாக்க, இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் என்னென்ன படங்கள், எத்தனை மணிக்கு ஒளிபரப்பாகின்றன என்பதைப் பார்க்கலாம்!
சன் டிவி
காலை 11 மணி - வாத்தி
மதியம் 2 மணி - வாரிசு
மாலை 6.30 மணி - ஜெயிலர்
கலைஞர்
காலை 10 மணி - கட்டாகுஸ்தி
மதியம் 1.30 மணி - துணிவு
விஜய் டிவி
காலை 11.30 மணி - பிச்சைக்காரன் 2
மதியம் 3 மணி - போர் தொழில்
ஜீ தமிழ்
காலை 9.30 மணி - காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்
மாலை 4.30 மணி- டிடி ரிட்டர்ன்ஸ்
ஜெயா டிவி
மதியம் 1.30 மணி - ஆரம்பம்
மாலை 6.30 மணி - வேலாயுதம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)