மேலும் அறிய

DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!

DELHI CM Oath: டெல்லியின் புதிய முதலமைச்சர் பிப்ரவரி 18ம் தேதி (நாளை) பதவியேற்கலாம் என பாஜக தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

DELHI CM Oath: டெல்லியில் பாஜக தலைமயிலான அரசில் 15 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு விழா:

தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ள பாஜக சார்பிலான, புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் பெயரை இறுதி செய்வதற்கு முன்பு கட்சி, அதன் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை இன்று நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் பாஜகவின் மவுனம்:

கடந்த சில நாட்களாக டெல்லியின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான, பாஜகவின் உயர்மட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. பர்வேஷ் வர்மா, ஆஷிஷ் சூட் மற்றும் ரேகா குப்தா உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், கட்சித் தலைமை அமைதியாகவே உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, டெல்லியில் அரசாங்கத்தை அமைக்க உரிமை கோரப்போவதாக கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் நாடு திரும்பி சில நாட்கள் ஆன பிறகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

முதலமைச்சர் பதவிக்கான ரேஸ்..

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா,  மத்தியத் தலைவர்களுடன் நெருங்கிய உறவுகளுக்கு பெயர் பெற்ற டெல்லி பாஜக பொதுச் செயலாளர் ஆஷிஷ் சூட்,  முக்கிய பெண் முகமான ரேகா குப்தா ,  பாஜகவின் மூத்த தலைவரும் டெல்லி சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா,  பிரபல பிராமணத் தலைவரும் முன்னாள் மாநிலத் தலைவருமான சதீஷ் உபாத்யாய்,  வைஷ்ய சமூகத்தைச் சேர்ந்த வலுவான ஆர்எஸ்எஸ் பிரதிநிதி ஜிதேந்திர மகாஜன் ஆகியோர் முதலமைச்சர் பதவிக்கான போட்டியாளர்களில் முன்னணியில் உள்ளனர்.

டெல்லிக்கு பெண் முதலமைச்சர்:

பாஜக தேசியத் தலைமை ஒரு பெண்ணை டெல்லியின் முதலமைச்சராக நியமிக்கவோ அல்லது முற்றிலும் புதிய முகத்தை தேர்ந்தெடுக்கவோ வாய்ப்புள்ளதாக கட்சித் தலைவர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர். கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி வேட்பாளர் சவுரப் பரத்வாஜை தோற்கடித்து வெற்றி பெற்ற ஷிகா ராய், பரிசீலனையில் உள்ள மற்றொரு முக்கிய பெண் முதலமைச்சர் வேட்பாளராவார்.

முக்கிய அமைச்சர் பதவிகளுக்கு 15 எம்எல்ஏக்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கி புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக, புதிய அரசில் இரண்டு துணை முதலமைச்சர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது புதிய அரசில் துணை முதலமைச்சர் பதவிக்கு வாய்ப்பு இல்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயர்மட்ட ஆலோசனை:

டெல்லியின் புதிய முதலமைச்சர், அமைச்சரவை குறித்து முடிவெடுக்க பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பிற பாஜக உயர்மட்டத் தலைவர்கள் இடையே ஒரு சந்திப்பும் விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 70 இடங்களில் 48 இடங்களை வென்று ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது . 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, பிப்ரவரி 8 அன்று அறிவிக்கப்பட்ட பரபரப்பான தேர்தல் முடிவுகளின்படி 22 இடங்களை மட்டுமே வென்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget