Cinema Headlines: சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்.. ஸ்டார், ரசவாதி படங்களின் விமர்சனம்.. சினிமா செய்திகள் இன்று!
Cinema Headlines: தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகளின் தொகுப்பு..
![Cinema Headlines: சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்.. ஸ்டார், ரசவாதி படங்களின் விமர்சனம்.. சினிமா செய்திகள் இன்று! Cinema Headlines May 10th star movie kavin rasavathi movie review silambarasan TR Good Bad Ugly Cinema Headlines: சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்.. ஸ்டார், ரசவாதி படங்களின் விமர்சனம்.. சினிமா செய்திகள் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/a1e9ea3b87bd52f9e999f4ad496d38961715341121888574_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
'தக் லைஃப்' படத்தில் சிம்பு நடிப்பதில் சிக்கல்... தயாரிப்பாளர் சங்கத்தில் ஐசரி கணேஷ் புகார்...
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்பு இணைந்திருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. முன்னதாக இக்கதாபாத்திரத்தில் கமிட்டான துல்கர் சல்மான் விலக, அவருக்கு பதிலாக சிம்பு இணைந்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய கொரோனா குமார் படத்தினை முடித்துக் கொடுக்காமல் சிம்பு வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் புகார் அளித்துள்ளார்.
“குட் பேட் அக்லி” ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடக்கம்.. அஜித் என்ன செய்யறாருனு பாருங்க!
நடிகர் அஜித்- இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைத்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது. விடாமுயற்சி திரைப்படம் ஒருபுறம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், மறுபுறம் ஹைதராபாத்தில் தொடங்கிய குட் பேட் அக்லி ஷூட்டிங்கின் முதல் நாளில் அஜித் கலந்துகொண்டார். அஜித் இப்படத்தில் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
மின்னியதா மழுங்கியதா? தொடர்ந்து சாதித்தாரா ‘ஸ்டார்’ கவின்? - முழு முதல் விமர்சனம் இதோ!
இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ஸ்டார். லால், அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் போராட்டம், வாழ்வின் ஏற்படும் திருப்பம், வலி ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்துள்ளது. 90களில் தொடங்கி பள்ளி, கல்லூரி மற்றும் அதற்கு அடுத்த காலங்களுக்கு ஏற்ப அதற்கான ஆடைகளும், கவின் முக பாவனைகளும் மாறியிருப்பதும் பாராட்ட வேண்டிய அம்சம். யுவனின் இசை படத்துக்கு பலம்.
அர்ஜூன் தாஸ் நடிப்பில் ரசவாதி.. வொர்க் அவுட் ஆனதா? திரை விமர்சனம் இதோ
நடிகர் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ் நடிப்பில், மௌன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ரசவாதி. கொடைக்கானலில் சித்த வைத்தியசாலை ஒன்றை நடத்தி வருகிறார் அர்ஜூன் தாஸ் . அங்கு இருக்கும் ஒரு சுற்றுலா பயணிகளுக்கான ரெஸார்ட்டில் மேனேஜராக வேலைக்கு சேர்கிறார் தான்யா ரவிச்சந்திரன். இதே கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு புது இன்ஸ்பெக்டராக வந்து சேர்கிறார் வில்லன் சுஜித் சங்கர். வில்லன் சுஜித் சங்கர், அர்ஜூன் தாஸின் காதலுக்கு எதிரி. வில்லன் அர்ஜூன் தாஸின் காதலை ஏன் பிரிக்க நினைக்கிறார்? அர்ஜூன் தாஸின் கடந்த காலத்திற்கும் இந்த புதிய இன்ஸ்பெக்டருக்கும் என்ன பகை என்பவற்றுக்கான விடை நேர்த்தியான காட்சியமைப்புகளுடன் படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)