விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட ஐஐடி பிஎச்டி மாணவர் – போலீசிடம் சிக்கிய கடிதம்
கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் 24 வயது பிஎச்டி மாணவர் திங்கள்கிழமை தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

24 வயது ஐஐடி-கான்பூர் பிஎச்டி மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் 24 வயது பிஎச்டி மாணவர் திங்கள்கிழமை தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இறந்தவர் அங்கித் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நொய்டாவில் வசித்து வருகிறார், வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று வந்தார்.
மாலையில் அங்கித்தின் நண்பர்கள் அவரை அழைத்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
அங்கித்தின் விடுதி அறை நீண்ட நேரம் உள்பக்கமாக பூட்டிக்கிடந்துள்ளது. இதையடுத்து அங்கித்தின் நண்பர்கள் கதவை தட்டி அவரை அழைத்துள்ளனர். ஆனால் அங்கித்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து அவர்கள் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது அங்கித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதைப்பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சிடைந்தனர். பின்னர் விடுதி கண்காணிப்பாளருக்கும் காவல்துறைக்கும் அவர்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கூடுதல் டிசிபி (மேற்கு) விஜேந்திர திவேதி கூறுகையில், “மாலை 5 மணியளவில் தற்கொலை குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது, அதன் பிறகு நாங்கள் உள்ளூர் போலீசாருடன் அங்கு வந்தோம். போலீசார் அங்கு சென்ற நேரத்தில், ஐஐடி-கான்பூர் அதிகாரிகள் கதவை உடைத்து உடலை வெளியே எடுத்து, அதை ஆதாரமாக வீடியோவாக படம்பிடித்துவிட்டனர். போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் ஆதாரங்களை சேகரிக்க தடயவியல் குழு வரவழைக்கப்பட்டது. அறையில் ஒரு தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டது, அதில் அங்கித் தனது சொந்த விருப்பத்தின் பேரில் தீவிரமான முடிவை எடுத்ததாகவும், அதற்கு யாரையும் குறை சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தற்கொலைக்கான சரியான காரணங்கள் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும். உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறந்தவரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து ஐஐடி நிறுவனம் தனது அறிக்கையில், "இன்று வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அங்கித் யாதவின் துயரமான மற்றும் அகால மறைவுக்கு ஐஐடி-கே இரங்கல் தெரிவிக்கிறது. யாதவ் ஒரு நம்பிக்கைக்குரிய ஆராய்ச்சி அறிஞராக இருந்தார், அவர் ஜூலை 2024 இல் யுஜிசி பெல்லோஷிப்புடன் இந்த நிறுவனத்தில் சேர்ந்தார். அவரின் மரணம் குறித்து விசாரித்து வரும் போலீசாருக்கு ஐஐடி முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மேலும் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நிறுவனம் உறுதிபூண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், ஐஐடி-காரக்பூரில் பயிலும் மாணவர் ஒருவர் தனது விடுதி அறைக்குள் இறந்து கிடந்தார். இறந்த ஷான் மாலிக், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார், அவரைச் சந்திக்க வந்த அவரது பெற்றோர் அவரை அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

