59 ஆபாச வீடியோ.. மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த பேராசிரியர்.. பிளாக்மெயிலால் வாழ்க்கையே போச்சு!
பேராசிரியர் ஒருவர் மாணவிகளை பிளாக்மெயில் செய்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோவாக எடுத்து, அந்த ஆபாச வீடியோக்களை காட்டி மாணவிகளை பிளாக்மெயில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் 50 வயது கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளை பிளாக்மெயில் செய்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோவாக எடுத்து, அந்த ஆபாச வீடியோக்களை காட்டி மாணவிகளை பிளாக்மெயில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவிகளை பிளாக்மெயில் செய்த பேராசிரியர்:
மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய ஆசிரியரே, குரூரச் செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் சமூகத்தை உலுக்கி வரும் நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் பேராசிரியரே, மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
ஹத்ராஸில் உள்ள சேத் பூல் சந்த் பாக்லா பாக் கல்லூரியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த சம்பவத்தை செய்தவர் கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ரஜ்னீஷ் குமார். இந்த சம்பவம் வெளியே தெரிந்ததில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட ரஜ்னீஷ் குமார் தலைமறைவாக இருந்தார்.
ஆபாச வீடியோக்கள்:
மாணவிகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூர வீடியோக்கள் காவல்துறை அதிகாரிகளிடம் இந்த வாரம் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "எத்தனை பெண்களை தான் பாலியல் வன்கொடுமை செய்தேன் என்று தனக்குத் தெரியாது என்று அவர் வாக்குமூலம் அளித்தார்.
மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதை வெப் கேமரா தெரியாமல் பதிவு செய்துவிட்டது. அதன் பிறகு, சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்துதான், பாலியல் வன்கொடுமை செய்வதை பதிவு செய்யத் தொடங்கினேன். இதன் மூலம், பல மாணவிகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிகிறது.
தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தருவதற்கும், வேலை தேடித் தருவதற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடமிருந்து லஞ்சம் வாங்கியிருக்கிறார். மேலும், இதை வைத்து மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டு, அவருக்கு திருமணம் நடந்துள்ளது. அந்த திருமணத்தின் நிலை என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. அவருக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 2001 ஆம் ஆண்டு, அவர் பாக்லா கல்லூரியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு அவர், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக பதவி உயர்வு பெற்றார்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டு வருகிறார். அவரது மொபைல் போனில் இருந்து 65க்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் கிடைத்துள்ளது. சில ஆபாச வீடியோக்கள் வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டது" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

