Nowruz: நவ்ரூஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரூஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Happy Nowruz: நவ்ரூஸ் பண்டிகையில் உங்களின் அன்புக்குரியவர்களுக்கு , வாழ்த்துகளை தெரிவித்து அன்புகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்

நவ்ரூஸ் (Nowruz) என்பது ஈரானின் புது வருடத்தை குறிக்கிறது. இந்த திருவிழாவானது ஈரான், மத்திய ஆசியா, மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகளில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இது இயற்கையின் புத்துணர்வையும், புதிய தொடக்கத்தையும் கொண்டுவரும் பண்டிகையாக நம்பிக்கை கொள்ளப்படுகிறது.
நவ்ரூஸ் பண்டிகை:
நவ்ரூஸ் என்பது கிழக்கு நாடுகளிலும், குறிப்பாக ஈரான், ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், மற்றும் இந்தியாவில் உள்ள பார்சி சமூகத்தினராலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது மார்ச் 20 அல்லது 21 அன்று, வடக்கு கோளத்தில் வசந்த ஒத்திசைவின் (Spring Equinox) போது நிகழும் பண்டிகையாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் இரவும் பகலும் சமமாக இருக்கும் நாளாகும். இந்தியாவில், இன்று மார்ச் 20 ஆம் தேதி நவ்ரூஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Also Read: Solar Eclipse: பகலில் மறையும் சூரியன்.! வருடத்தின் முதல் சூரிய கிரகணம்: எப்போது?
Also Read: Lunar Eclipse: சிவப்பாக மாறப்போகும் இரவு: வருடத்தின் முதல் சந்திர கிரகணம்: எப்போது?
நவ்ரூஸ் வாழ்த்துகள்:
நவ்ரூஸ் பண்டிகையின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதற்கும், அன்பும் நேசமும் பரிமாறுவதற்குமான நாளாக பார்க்கப்படுகிறது. பொதுவாக பார்சிகள் மற்றும் மத்திய ஆசிய மக்கள் வாழ்த்துகளை பகிர்வது வழக்கமாக பார்க்கப்படுகிறது. இதில் சில வாழ்த்துகளை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம். உங்களது அன்புக்குரியவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- "நவ்ரூஸ் முக்பாரக்!" (Navroz Mubarak)
- "நவ்ரூஸ் புது ஒளியைக் கொண்டு வரட்டும்!"
- "இந்த நவ்ரூஸ் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பல்லாண்டு நிலைக்கச்செய்யட்டும்.
- உங்களுக்கு பிரகாசமான மற்றும் வளமான நவ்ரூஸ் வாழ்த்துக்கள்!
- இந்த புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சியையும் வெற்றியையும் தரட்டும்.
நவ்ரூஸ் வாழ்த்துக்கள்! - உங்கள் வாழ்க்கை அன்பு, மகிழ்ச்சி மற்றும் புதிய தொடக்கங்களால் நிறைந்திருக்கட்டும்.
நவ்ரூஸ் பண்டிகை உங்கள் வீட்டை அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நிரப்பட்டும்.
உங்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தையும், முன்னோக்கி ஒரு அற்புதமான பயணத்தையும் வாழ்த்துகிறேன். நவ்ரூஸ் வாழ்த்துக்கள்! - இந்த நவ்ரூஸ் உங்களுக்கு ஆரோக்கியம், செல்வம் மற்றும் முடிவற்ற ஆசீர்வாதங்களைக் கொண்டு வரட்டும்.
- நவ்ரூஸ் வாழ்த்துக்கள், என் நண்பரே! இந்த ஆண்டு சிரிப்பு, அன்பு மற்றும் சிறந்த நினைவுகள் நிறைந்ததாக இருக்கட்டும்.
- வசந்த மலர்களைப் போல எங்கள் நட்பு தொடர்ந்து மலரட்டும். உங்களுக்கு மகிழ்ச்சியான நவ்ரூஸ் வாழ்த்துக்கள்!
- நவ்ரூஸ் முபாரக்! இந்த ஆண்டு புதிய சாகசங்கள் மற்றும் மகிழ்ச்சிக்கு இதோ.
உங்களுக்கு நவ்ருஸ் ஆசீர்வாதங்களையும் அன்பான வாழ்த்துக்களையும் அனுப்புகிறேன்!
நவ்ரூஸ் கொண்டாட்டத்தின் சிறப்புகள்:
- இந்த நாளில் ஈரானிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, ஏழு விசேஷ பொருட்களைக் கொண்டுள்ள அழகான மேசையை (Haft-Seen Table) அமைப்பார்கள்.
- புதுப்பித்தல் மற்றும் சுத்தம் – வீடுகளை சுத்தம் செய்வதும், பழையதை மாற்றி புதியவை கொண்டுவருவதும், இந்நாளின் சிற்ப்பாக பார்க்கப்படுகிறது.
- மியூக்ஸ் மற்றும் நடனம் – மகிழ்ச்சியான பாடல்கள் மற்றும் பாரம்பரிய நடனங்களுடன் உற்சாகமான கொண்டாட்டமாக இருக்கும்.
- நன்மை செய்யுதல் – பிறருக்கு உதவுதல், அன்பை பகிர்தல் போன்ற பண்புகளால் நிறைந்துள்ளது.
இந்த நவ்ரூஸ் பண்டிகை ஒற்றுமையை வளர்த்துக்கொள்வதற்கும், இனிமையான எதிர்காலத்துக்காக அனைவரும் உற்சாகமாக தொடங்குவதற்கும் வழிவகுக்கிறது. இந்நிலையில் , இந்த நாளை சிறப்பாக கொண்டாடுங்கள்,அனைவருக்கும் நவ்ரூஸ் முக்பாரக்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

