மேலும் அறிய
மனைவி ஆபாச படம் பார்த்து அதை செய்கிறார்.. விவாகரத்து கேட்ட கணவர் - நீதிமன்றம் சொன்னது என்ன?
மனைவி ஆபாச படம் பார்த்து சுய இன்பம் செய்கிறார் உள்ளிட்ட காரணங்களை கூறி விவகாரத்து கோரி கணவன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரை அமர்வு உத்தரவு.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில், பெண்கள் சுய இன்பம் செய்வதை குற்றமாக கருத இயலாது. அதோடு ஆண்கள் சுய இன்பம் செய்வது இல்லற வாழ்க்கையை பாதிக்கும். ஆனால் பெண்கள் சுய இன்பம் செய்வது அது இல்லற வாழ்வை பாதிக்கும் என்பதற்கான தரவுகள் எதுவும் இல்லை நீதிபதிகள் தெரிவித்தனர்.
உயர்நீதி மன்ற கிளை உத்தரவு
கரூரை சேர்ந்த நபர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கரூர் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து, தனக்கும் தனது மனைவிக்கும் விவாகரத்து வழங்கக் கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பூர்ணிமா அமர்வு, "மனுதாரருக்கு அவரது மனைவிக்கும் கடந்த 2018 ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தைகள் இல்லை. 2020 டிசம்பர் மாதம் முதல் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் தனது திருமண உரிமையை மீட்டு வழங்க கோரி மனுதாரரின் மனைவி 2021ல் கரூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பின்னர் இந்த வழக்கு கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மனைவி பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான மருத்துவ அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. 2 ஆண்டுகளாக கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் மனைவி பாலியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மனுதாரரும் பாலியல் நோயால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அது போன்ற விபரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. அடுத்ததாக பெண்கள் தொடர்பான நோயால் மனைவி பாதிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் குறிப்பிடும் நோய் எளிதாக சரி செய்யக்கூடியதே. அதோடு மனைவி அதிகமாக செலவுக் செய்கிறார், ஆபாச படங்களை பார்த்து சுய இன்பம் காண்கிறார், வீட்டு வேலைகளை செய்வதில்லை, மாமியார் மாமனாரை மதிப்பதில்லை, அதிக நேரம் போனிலேயே செலவழிக்கிறார் போன்றவற்றையும் விவாகரத்து பெறுவதற்கான காரணங்களாக குறிப்பிட்டிருக்கிறார். மனுதாரரின் மனைவி ஆபாச படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபட்டார் என்பதையும், அது சத்திய பிரமாணத்திற்கு எதிரானது என்பதையும் உறுதி செய்ய இயலாது.
விவாகரத்து பெறுவதற்கான காரணமாக கூற இயலாது
தடை செய்யப்பட்ட வகையைத் தவிர தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பதை குற்றமாக கருத இயலாது. எதற்கும் அடிமையாவது மோசமானது. அந்த வகையில் ஆபாச படங்களுக்கு அடிமையாவதும் தவறு. அதோடு அது பெண்களை மோசமாக சித்தரித்து இழிவுபடுத்தும் வகையில் இருப்பதால், அதனை தார்மீக ரீதியாக நியாயப்படுத்த முடியாது. அதே சமயம் தனிப்பட்ட மற்றும் சமூக ஒழுக்கம் ஒரு புறமிருந்தாலும், சட்ட மீறல் மற்றொருபுறம் உள்ளது. எதிர்மனுதாரரின் செயல் சட்டத்திற்கு புறம்பானதாக இல்லாதவரை இதனை விவாகரத்து பெறுவதற்கான காரணமாக கூற இயலாது. மனுதாரரின் மனைவி சுய இன்பம் செய்வதையும் காரணமாக ஏற்க இயலாது.
சுயஇன்பம் தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல
ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில், பெண்கள் சுய இன்பம் செய்வதை குற்றமாக கருத இயலாது. அதோடு ஆண்கள் சுய இன்பம் செய்வது இல்லற வாழ்க்கையை பாதிக்கும். ஆனால் பெண்கள் சுய இன்பம் செய்வது அது இல்லற வாழ்வை பாதிக்கும் என்பதற்கான தரவுகள் எதுவும் இல்லை. தனியுரிமை ஒரு அடிப்படை உரிமையாக இருப்பதால், அது திருமண உறவில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். சுயஇன்பம் தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல. திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் மனைவியாக மாறுகிறார், அவரது தனியுரிமையையும் அவர் கைக்கொள்கிறார். அவரது அடிப்படை உரிமையை மனைவியாகிவிட்டார் என்பதற்காக மறுக்க இயலாது. மனுதாரர், எதிர்மனுதாரர் மீது வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை. அப்படி அந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பினும் அதுக் சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்துக்கு கோருவதற்கான காரணங்களாக இல்லை. ஆகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
ஃபேக்ட் செக்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion