மேலும் அறிய

Petrol Diesel Price Today: 21 மாதங்கள் ஓவர்.. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Petrol Diesel Price Today, February 22: பெட்ரோல், டீசல் இன்று எந்த விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.

Petrol Diesel Price Today, February 22: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.

பெட்ரோல், டீசல்:

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 22ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 642வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Video Amit Shah - Tamilisai : அண்ணாமலையை சீண்டிய தமிழிசை - மேடையிலேயே கண்டித்தாரா அமித்ஷா? வீடியோ வைரல்
அண்ணாமலையை சீண்டிய தமிழிசை - மேடையிலேயே கண்டித்தாரா அமித்ஷா? வீடியோ வைரல்
Breaking News LIVE:  சந்திரபாபு நாயுடுவின் தலைமை இரு மாநில உறவுக்கு வலிமை சேர்க்கட்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Breaking News LIVE: சந்திரபாபு நாயுடுவின் தலைமை இரு மாநில உறவுக்கு வலிமை சேர்க்கட்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Chandrababu Naidu: ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு - மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு
ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு - மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு
Aadhaar Fraud Fact Check: தொட்டா போச்சு.. ஆதார் பெயரில் மோசடி முயற்சி.. மாட்டிக்காதீங்க மக்களே!
தொட்டா போச்சு.. ஆதார் பெயரில் மோசடி முயற்சி.. மாட்டிக்காதீங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Annamalai Minister post  : அண்ணாமலைக்கு NO... அமைச்சர் ஆகாதது ஏன்? பாஜகவின் ப்ளான்MK Stalin Plan : தள்ளிப்போன உதயநிதியின் பட்டாபிஷேகம்! ஸ்டாலின் பக்கா பிளான்Selvaperunthagai | ’’திமுக நிழலில் காங்கிரஸ்?’’என்ன பேசினார் செ.பெருந்தகை?BJP new president | BJP-க்கு இளம் தலைவர்? மோடி ட்விஸ்ட்!கதிகலங்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Video Amit Shah - Tamilisai : அண்ணாமலையை சீண்டிய தமிழிசை - மேடையிலேயே கண்டித்தாரா அமித்ஷா? வீடியோ வைரல்
அண்ணாமலையை சீண்டிய தமிழிசை - மேடையிலேயே கண்டித்தாரா அமித்ஷா? வீடியோ வைரல்
Breaking News LIVE:  சந்திரபாபு நாயுடுவின் தலைமை இரு மாநில உறவுக்கு வலிமை சேர்க்கட்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Breaking News LIVE: சந்திரபாபு நாயுடுவின் தலைமை இரு மாநில உறவுக்கு வலிமை சேர்க்கட்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Chandrababu Naidu: ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு - மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு
ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு - மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு
Aadhaar Fraud Fact Check: தொட்டா போச்சு.. ஆதார் பெயரில் மோசடி முயற்சி.. மாட்டிக்காதீங்க மக்களே!
தொட்டா போச்சு.. ஆதார் பெயரில் மோசடி முயற்சி.. மாட்டிக்காதீங்க மக்களே!
காங்கிரஸுக்கு புது சிக்கல்.. மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை காப்பாற்றி கொள்ளுமா?
காங்கிரஸுக்கு புது சிக்கல்.. மாநிலங்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை காப்பாற்றி கொள்ளுமா?
Parliament Session: 18ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம்.. ஜூன் 24ஆம் தேதி கூடுகிறது!
24ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டம்.. அசுர பலத்துடன் தயாராகும் எதிர்க்கட்சிகள்.. சமாளிக்குமா பாஜக அரசு?
MP Salary Benefits: எம்.பி., சம்பளத்தை விடுங்க, சலுகைய கவனிங்க..! ரயில் - விமானம், தண்ணீர் - மின்சாரம் எல்லாமே ஃப்ரீ..!
எம்.பி., சம்பளத்தை விடுங்க, சலுகைய கவனிங்க..! ரயில் - விமானம், தண்ணீர் - மின்சாரம் ஃப்ரீ
Stock Market Today: ஐ.டி. பங்குகள் உயர்வு;புதிய உச்சம் தொட்ட நிஃப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!
ஐ.டி. பங்குகள் உயர்வு;புதிய உச்சம் தொட்ட நிஃப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!
Embed widget