மேலும் அறிய

தேனியில் வாழை விவாசாயம் பாதிப்பு - காரணம் என்ன ?

செவ்வாழை கிலோ ரூ.60 வரை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். ஆனால், உரிய எடை இல்லாததால் விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ளனர்.

உலக அளவில் வாழை ஏற்றுமதிக்கு என்று ஒரு பெரிய சந்தை உள்ளது எனலாம். சர்வதேச அளவில் 97.5 லட்சம் மில்லியன் டன் வாழை ஆண்டு தோறும் உற்பத்தியாகிறது. இதில் இந்தியாவில் மட்டும் 16.91 லட்சம் மில்லியன் டன் உற்பத்தியாகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்கள்  ஏறக்குறைய 90 சதவீதம் உள்நாட்டு தேவைக்கு பயன்படுகிறது. 10 சதவீதம் மட்டுமே ஏற்றுமதியாகிறது. குறைந்த அளவிலான வாழைப் பழங்கள் ஏற்றுமதி ஆனாலும் அதற்குப் போதிய விலை கிடைக்கிறது என்கின்றனர் விவசாயிகள். இருந்தபோதிலும் இங்கு உற்பத்தியாகும் பெரும்பாலான பழங்கள் உள்நாட்டிலேயே  அதன் சந்தை உள்ளதால், வாழைப் பழங்களுக்கு நிலையான  விலை கிடைக்காமல்  இருப்பதால், வாழைப்பழங்களுக்கான விலை  கிடைக்காத சமயங்களில் விவசாயிகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது.

தேனியில் வாழை விவாசாயம் பாதிப்பு -  காரணம் என்ன ?

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான சின்னமனூர், ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், எரசை, சீப்பாலக்கோட்டை, வேப்பம்பட்டி' டி, சீலையம்பட்டி, ராயப்பன்பட்டி, கம்பம், கூடலூர், அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், புதுப்பட்டி உள்ளிட்டப்பகுதிகளில் வாழை விவசாயம் அதிகளவில் நடை பெறுகின்றன. திசு, செவ்வாழை, நேந்திரம், பூவன் உள்ளிட்ட ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் விளைவிக்கப்படும் வாழைப்பழம் அரபுநாடுகள், மலேசியா,சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தேனியில் வாழை விவாசாயம் பாதிப்பு -  காரணம் என்ன ?

இதற்காக, தனியார் தொழிற்சாலைகள் மூலமாக வாழைப் பழங்களை பதப்படுத்தி, சரக்கு வாகனங்கள் மூலம் தூத்துக்குடி போன்ற துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தட்ப வெப்பநிலையால் விளைச்சல் காமாட்சிபுரத்தில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு மேற்குத்தொடர்ச்சி மலை சூழ்ந்த பகுதியாகும். இந்த மலை விவசாயத்துக்கு இயற்கை அரணாக இருப்பதால், ஆண்டுதோறும் நிலவும் தட்ப வெப்பநிலை வாழை விவசாயத்துக்கு ஏற்றதாக அமைகிறது. மேலும், வாழை சிறப்பாக வளரும் செம்மண் இந்தப்பகுதியில் இருப்பது தனிச் சிறப்பாகும். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பருவ நிலை மாற்றத்தால் கோடைகாலங்களை தவிரபருவமழை காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக காணப்படுகிறது.

தேனியில் வாழை விவாசாயம் பாதிப்பு -  காரணம் என்ன ?

நிகழாண்டிலும் ஏப்ரல், மே மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த பருவநிலை மாற்றத்தால் வாழை விவசாயம் பாதிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து காமாட்சிபுரம் விவசாயிகள்  கூறியதாவது, நிகழாண்டில் செவ்வாழை விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் புதுமையாக பழத்தின் எடை, வளர்ச்சி குறைந்துள்ளன. செவ்வாழை கன்று முதல் அறுவடைவரை சுமார் 16 மாதங்கள் பராமரிப்பு செய்ய வேண்டும். ஒரு வாழைக்கு சராசரியாக ரூ.400 வரை செலவாகிறது. இந்தசெவ்வாழையில் உள்ளன ஒரு தாரில் $ முதல் சீப்புகள் (பழங்கள் வரிசை) 80 முதல் 90கிலோ எடை இருக்கும். ஆனால்,  நிகழாண்டில் எடையானது பாதியாக குறைந்துவிட்டது. 7தற்போது, செவ்வாழை கிலோ ரூ.60வரை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். ஆனால், உரிய எடை இல்லாததால் விவசாயிகள் இழப்பைச் சந்தித்துள்ளனர். இதற்கு கோடை காலத்தில் நிலவும் அதிகமான வெப்பமும், காலம் தவறி வீசியபருவக்காற்று தான் முக்கியக் காரணம் என்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: ”என் கவலையே..” அதிமுகவிற்கு ஒரு குத்து, பாஜகவிற்கு ஒரு குத்து - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: ”என் கவலையே..” அதிமுகவிற்கு ஒரு குத்து, பாஜகவிற்கு ஒரு குத்து - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
GSLV F15: நாடே வெயிட்டிங்..! ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய உள்ள 100வது ராக்கெட் - விஷயம் தெரியுமா?
GSLV F15: நாடே வெயிட்டிங்..! ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய உள்ள 100வது ராக்கெட் - விஷயம் தெரியுமா?
Today Power Shutdown:  தமிழகத்தில் இன்று ( 27.01.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட்
Today Power Shutdown: தமிழகத்தில் இன்று ( 27.01.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட்
இன்றைய ராசிபலன் 27.01-2025: மகிழ்ச்சியான நாள்...
இன்றைய ராசிபலன் 27.01-2025: மகிழ்ச்சியான நாள்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayiladuthurai Cheating Girl : வடிவேல் பட பாணி.. 4 பேரை ஏமாற்றிய இளம்பெண்! சிக்கிய அதிர்ச்சி பின்னணிதனி ரூட்டில் வானதி, நயினார்! அப்செட்டில் அண்ணாமலை! பாஜகவில் வெடிக்கும் சர்ச்சை”திரும்ப விசாரணை நடத்துங்க! குறையே இருக்க கூடாது”வேங்கைவயல்- விஜய் போர்க்கொடிAjithkumar award: அஜித்திற்கு Padma Bhushan.. பின்னணியில்  இருக்கும் அரசியல்! விஜய் தான் காரணமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: ”என் கவலையே..” அதிமுகவிற்கு ஒரு குத்து, பாஜகவிற்கு ஒரு குத்து - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: ”என் கவலையே..” அதிமுகவிற்கு ஒரு குத்து, பாஜகவிற்கு ஒரு குத்து - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
GSLV F15: நாடே வெயிட்டிங்..! ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய உள்ள 100வது ராக்கெட் - விஷயம் தெரியுமா?
GSLV F15: நாடே வெயிட்டிங்..! ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய உள்ள 100வது ராக்கெட் - விஷயம் தெரியுமா?
Today Power Shutdown:  தமிழகத்தில் இன்று ( 27.01.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட்
Today Power Shutdown: தமிழகத்தில் இன்று ( 27.01.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட்
இன்றைய ராசிபலன் 27.01-2025: மகிழ்ச்சியான நாள்...
இன்றைய ராசிபலன் 27.01-2025: மகிழ்ச்சியான நாள்...
மனைவி போட்ட கவர்ச்சி போட்டோ! வசமாக சிக்கிய போதை கும்பல் தலைவன்! எப்படி?
மனைவி போட்ட கவர்ச்சி போட்டோ! வசமாக சிக்கிய போதை கும்பல் தலைவன்! எப்படி?
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
Embed widget