ஷோ காட்ட அளவு இல்லையா...உள்ளாடையுடன் கிரிக்கெட் விளையாடி வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்
பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃபின் மகன் டைகர் ஷ்ராஃப் உள்ளாடையுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உள்ளாடையுடன் கிரிக்கெட் விளையாடிய டைகர் ஷ்ராஃப்
மூத்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃபின் மகன் டைகர் ஷ்ராஃப். வார் , பாகி , படே மியான் சோட்டே மியான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தனது ஃபிட்னஸூக்காக அறியப்படும் டைகர் ஷ்ராஃப் அதே ஃபிட்னஸை காட்டி அடிக்கடி வீடியோ வெளியிடுவதற்காக விமர்சிக்கவும் படுவார். அந்தவகையில் டைகர் ஷ்ராஃப் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை டைகர் ஷ்ராஃப் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் 'இவருக்கு வேற வேல இல்ல எதுக்கு எடுத்தாலும் துணிய கழட்டிடுறாரு' என சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்
View this post on Instagram





















