மேலும் அறிய

புதுச்சேரியில் இ-விதான் செயலி துவக்கம்: விரைவில் ஒரே தேர்தல்! அமைச்சர் முருகன் தகவல்

இ-விதான் செயலி எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போகிறது - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய இ- விதான் செயலி துவக்க விழாவில், விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போகிறது என மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:

புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதம் இல்லாத சட்டப்பேரவையாக மாற்றும் வகையில், வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இ- விதான் செயலி முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இவிதான் செயலியை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடியின் ஆட்சியில், நாடு வேகமாக வளர்ந்துள்ளது. பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களால் கடந்த 10 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமைகோட்டில் இருந்து மேலே உயர்த்தி உள்ளோம். பிரதமர் மோடி தைரியமாக கொண்டு வந்த டிஜிட்டல் பரிவர்த்தனை, இன்று குக்கிராமங்களிலும் நடக்கிறது. இதனால், டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் 2வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் கடந்தண்டு 5 இடத்தில் இருந்தோம். இந்தாண்டு 4ம் இடம். வரும் 2027ல் மூன்றாம் இடம். 2047 ல் மிக பெரிய வல்லரசு நாடாக இந்தியா இருக்கும்.

கடந்த காலங்களில் ஏழைகளை உயர்த்த வேண்டும் என கூறி வந்தார்கள். ஆனால் எந்த வேலையும் செய்யவில்லை. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 27 கோடி மக்களை கடந்த 11 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் இருந்து உயர்த்தியுள்ளோம் என உலக வங்கி கூறியுள்ளது. புதுவைக்கு விமான நிலையம், காரைக்காலில் ஜிப்மர் கிளை கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, துாத்துக்குடி விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. சாதாரண மக்கள்கூட விமானத்தில் செல்லும் சூழ்நிலையை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார்.

டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வந்தபோது, அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம், படிப்பு தெரியாதவர்களுக்கு செல்போனை பயன்படுத்த தெரியாது; இதை எப்படி அவர்கள் பயன்படுத்துவார்கள் என்று கேள்வி கேட்டார். ஆனால் இன்று இந்தியா முழுவதும் பல கிராமங்களில் இதனை பயன்படுத்துகின்றனர்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்

முன்பு ஆட்சி செய்தவர்கள் திட்டங்களை தீட்டவோ, நிறைவேற்றவோ தைரியம் இல்லாமல் இருந்தனர். பிரதமராக மோடி வந்த பின் தைரியமான முடிவுகள் எடுக்கப்பட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வரப்பட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் 2-வது இடத்தை இந்தியா பெற்று சாதனை பெற்றுள்ளது. இந்தியா பொருளாதாரம் உலகளவில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது. 2027-ல் 3ம் இடம், 2047-ல் அப்துல்கலாம் கனவு கண்ட வல்லரசு நாடாக இந்தியா மாறியிருக்கும்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது ஒரு நாடு, ஒரு செயலி என இப்போது இ-விதான் செயலி எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போகிறது என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில் 18ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் மறைந்த நில தான வரலாறு!
சிவகங்கையில் 18ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் மறைந்த நில தான வரலாறு!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget