Trichy airport new terminal |திருச்சியில் புதிய முனையம்! விமானத்துக்கு வாட்டர் சல்யூட்
திருச்சியில் புதிய முனையம்! விமானத்துக்கு வாட்டர் சல்யூட்
திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையம், இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த முனையத்திற்கு வந்த முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும், ரூ.1,112 கோடி மதிப்பிலான திட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு மோடி தொடங்கி வைத்தார். அதன்படி பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய முனையத்தில் ஆண்டுக்கு சுமார் 45 லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள் தரையிறங்கும் வசதி உள்ளது. இங்கு 104 இமிகிரேசன் கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த முனையம் இன்று பயன்பாட்டுக்கு வந்த நிலையில், புதிய முனையம் வாயிலாக பயணம் மேற்கொள்ள வந்த பயணிகளை, விமான நிலைய ஊழியர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அதன்படி, சென்னையில் இருந்து வந்த இண்டிகோ விமானம், முதல் விமானமாக அந்த முனையத்தில் தரையிறங்கியது. அபோது, விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது.