Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்பு
ரெமோ போல் மாணவிகள் முன்பு பைக்கில் சாகசம் செய்து அச்சுறுத்தி ரீல்ஸ் போட்டு போலீசாரிடம் சிக்கிய இளைஞர், தற்போது அம்பியாக மாறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
திருச்சியில் பைக் சாகசம் செய்து மக்களை அச்சுறுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி வருண்குமார் எச்சரித்திருந்தார். இது தொடர்பாக புகார் அளிக்க உதவி எண்ணும் வெளியிடப்பட்டது. அந்தவகையில் திருச்சி புத்தூர் மூல கொள்ளை தெருவைச் சேர்ந்த சீனி ரியாஸ் என்ற இளைஞர் லைக்ஸ் மோகத்தால் தற்போது வசமாக சிக்கியுள்ளார்.
திருச்சியின் மெயினான மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் பைக் வீலிங் உள்ளிட்ட சாகசம் செய்து அதனை வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்டு வந்துள்ளார். ட்ரிபிள்ஸ் சென்று சாலை விதிகளை மீறியதை கூட தைரியமாக ரீல்ஸ் எடுத்து போட்டுள்ளார். அடுத்ததாக ஒரு படி மேலே போய் பள்ளி, கல்லூரி மாணவர்களை பயமுறுத்துவது போல் பைக்கில் உரசுவது போல் சீண்டியுள்ளார். தன்னை ஒரு ரொமோவாக நினைத்து கொண்டு ரெமோ பாடலோடு சேர்த்து அந்த ரீல்ஸை போட்டுள்ளார்.
இந்த வீடியோக்கள் போலீசாரின் கவனத்துக்கு சென்றதும் இளைஞரின் அலப்பறைக்கு முடிவு கட்டியுள்ளனர். லைக்ஸுக்காக தன்னை ஒரு ஹீரோவாக நினைத்து மக்களை பயப்பட வைத்த இளைஞருக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர். அதனால் தற்போது இளைஞரே விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு சைலண்ட் மோடுக்கு சென்றுள்ளார்.