”கூட்டணியை உடைக்க பார்க்கிறேனா? நான் சிவனேன்னு இருக்கேன்” சூடான அண்ணமலை
நான்பாட்டிற்கு சிவனேன்னு நான் உண்டு என் ஆடு, மாடுகளை வளர்த்துக்கொண்டும், கிரிக்கெட்டும் என இருந்து வருகிறேன் என்று அண்ணமலை தெரிவித்தார்.

பாஜக அதிமுக கூட்டணியை நான் உடைக்க பார்க்கிறேனா என்று செய்தியாளர் சந்திப்பில் பாஜக முன்னாள் தலைவர் கடுப்பான சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியிருந்தது
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு:
சென்னை செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது, சிபிஐ விசாரணையில் அஜித்குமாரை கைது செய்த காவல்துறையினரே வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றி இருப்பது தெரிய வருகிறது. சிபிஐ விசாரணை உண்மை என்றால் அரசே தவறு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
சிஸ்டத்தை காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே, தவறு செய்கிறார்கள் என்றால் என்ன செய்ய முடியும்.
தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினருக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது.
காவல்துறையினரின் பணிச்சுமை:
பந்தோபஸ்து, லா அன் ஆர்டர், நைட் டியூட்டி என பல பணிகளில் காவல்துறையினருக்கு மிக மிக அதிகமாக பணிச்சுமை உள்ளது.காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க தமிழ்நாடு முதல்வர் என்ன செய்திருக்கிறார்.
தெலுங்கானாவை ஒப்பிடும்போது தமிழ்நாட்டு காவல்துறையினரின் சம்பளம் மிக மிகக் குறைவு.வெளியே உள்ள பணம் படைத்தவர்கள் காவல்துறையை தூண்டுகிறார்கள். இந்த சம்பவத்தில் காவல் துறை காவல் துறை என நேரடியாக கூறுவதை விட காவல்துறை மீது உள்ள அழுத்தத்தையே கூற வேண்டும்.
காவல்துறை மீது உள்ள பணிச்சுமையையும் மன அழுத்தத்தையும் குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் அடுத்த ஒரு அஜித்குமாரும் உயிரிழக்க நேரிடும்.
பாஜக யாரையும் ஏமாற்றாது
பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை,;அதே நேரத்தில் ஏமாறுகிற கட்சியும் இல்லை என எடப்பாடியின் கருத்துக்கு அண்ணாமலை என பதில் அளித்தார் மீண்டும் சொல்கிறேன் கூட்டணி அமைத்ததில் எனது பங்கு இல்லை மற்றொரு கட்சிகளும் இன்னொரு கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம். எல்லா கட்சிகளும் மற்ற கட்சிகளை சகோதரத்துவமாக பார்க்க வேண்டும்.
அதிமுகவுடன் ஒரு பெரிய கட்சி இணைய உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி கூரியது குறித்து கேட்ட பொழுது
”எடப்பாடியின் பேட்டியை நான் பார்க்கவில்லை, பெரிய கட்சி சேருமா என எனக்கு தெரியவில்லை.
கோவையில் தொடங்கிய எடப்பாடி என் சுற்றுப்பயணத்தில் பாஜக மாநில தலைவரும் மத்திய இணை அமைச்சரும் கலந்து கொண்ட போது நான் எதற்காக கலந்து கொள்ள வேண்டும். கட்சியின் சார்பாக அகில இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில் நான் எதற்கு கலந்து கொள்ள வேண்டும்.
தேசிய பொதுச்செயலாளர் பதவி தர வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, பதவியை நோக்கி நான் சென்றதில்லை, மாநில தலைவர் பதவியே வெங்காயம் தான் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது. நான் எந்த பதவியையும் விரும்பவில்லை என்றார்.
கூட்டணியை உடைக்க பார்க்கிறேனா?
அதிமுக-பாஜக கூட்டணியை நீங்கள் உடைக்க கூட்டணிக்கு எதிராக பேசுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே என்ற கேள்விக்கு அண்ணாமலை கடுப்பானார். நான் கூட்டணிக்கு எதிரான நான் பேசி வருகிறேனா, ஆட்சியில் பங்கு என்று யார் சொன்னது மாண்புமிகு மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார் கூட்டணி மேடையில் அமித் ஷாவுடனும், ஈபிஎஸ் உடனும் அமர மாட்டேன் என்று சொன்னேன்னா,,
"கூட்டணியை உடைக்க பாக்குறேனா?” கடுப்பான அண்ணாமலை#annamalai #edappadipalanisamy #bjp #admk #abpnadu pic.twitter.com/ipEfhMhDR0
— ABP Nadu (@abpnadu) July 21, 2025
எங்கேயாவது கூட்டணிக்கு எதிராக நான் பேசி இருக்கிறேனா? நான் கடந்த 3 மாதமாக இதை குறித்து எதுவும் பேசவில்லை. நான்பாட்டிற்கு சிவனேன்னு நான் உண்டு என் ஆடு, மாடுகளை வளர்த்துக்கொண்டும், கிரிக்கெட்டும் என இருந்து வருகிறேன் என்று தெரிவித்தார்.






















