BJP Vinoj P Selvam Tweet: சமூக அமைதியை குலைப்பதாக புகார்.. பாஜக இளைஞரணி தலைவர் மீது வழக்குப்பதிவு
BJP Vinoj P Selvam Tweet: ஜனவரி 26-ம் தேதி, நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், ”விடுதலைப்போரில் தமிழகம் என குடியரசு தினத்தில் கருப்பு கொடி பறக்கவிட்டவர்கள் 130 புனிதமான இந்து ஆலயங்களை இடித்துள்ளதாக செய்தி. சுதந்திர போரைக் காட்டிலும் இந்துமதம் இப்போதுதான் அதிகம் நசுக்கப்படுகிறது! உள்ளாட்சியிலாவது நல்லாட்சி மலர்ந்து, விடுதலை பெற ஆதரிப்பீர் பாஜக கூட்டணிக்கு!” என பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் சர்ச்சையான நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர், விஜோஜ் பி செல்வம் வதந்தியை பரப்பி, மக்களிடத்தில் வெறுப்பையும், பகைமையும் உருவாக்க நினைப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருக்கிறார்.