SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
SSC MTS Tier 1 Result 2024 OUT: SSC MTS தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பது குறித்தும் , அதற்கு கட் ஆஃப் எவ்வளவு தேவை என்பது குறித்தும் பார்ப்போம்.

SSC MTS - Tier 1 தேர்வை எழுதியவர்கள், எப்போது முடிவுகள் வெளியாகும் என காத்திருக்கும் நிலையில், தற்போது முடிவை , பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. SSC MTS - Tier 1 தேர்வு முடிவானது, அதன் அதிகாரப்பூர்வ ssc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தகட்ட உடல்தகுதி தேர்வுக்கு 27, 011 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவு: எப்படி,தெரிந்து கொள்வது ?
விண்ணப்பதாரர்கள் தங்கள் SSC MTS தேர்வு முடிவை பின்வரும் முறையில் பார்க்கலாம்
- ssc.gov.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
- அதிகாரப்பூர்வ வலது வழிசெலுத்தல் டாஷ்போர்டில் கொடுக்கப்பட்டுள்ள ‘முடிவு தாவலைக்’ கிளிக் செய்யவும்
- SSC MTS ஹவால்தார் தேர்வு தாவலில் கிளிக் செய்யவும்
- SSC MTS ஹவால்தார் முடிவு PDF இணைப்புகள் திரையில் கிடைக்கும்
- கோப்பு இணைப்பைக் கிளிக் செய்து விரும்பிய ரோல் எண்ணைத் தேடவும்
Also Read: வெடித்த எலான் மஸ்க் ஸ்டார்சிப் ராக்கெட்: நெருப்பு மழையாக மாறிய வானம்: கூலாக பதிலளித்த மஸ்க்.!
SSC MTS தேர்வு 2024:
SSC MTS ஹவால்தார் 2024 தேர்வானது, கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 19, 2024 வரை ஆன்லைனில் நடத்தப்பட்டது. SSC MTS விடைக் குறிப்புகளை நவம்பர் 29, 2024 அன்று ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில், தேர்வு முடிவானது, இன்று வெளியாகியுள்ளது.
இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் SSC MTS மெரிட் பட்டியல் PDF ஐ பதிவிறக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் உடல் திறன் தேர்வு (PET)/உடல் தரநிலை தேர்வு (PST) க்கு அழைக்கப்படுவார்கள்.
Also Read: PM Modi-Trump Inauguration: சீனாவுக்கு அழைப்பு; மோடிக்கு இல்லை.! நண்பரை, டிரம்ப் அழைக்காதது ஏன்?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

