மேலும் அறிய

Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICE

எதிரிகளை தாக்கும் போது பாம் போட்டு நிலைகுழையச் செய்பவர், 8 போலிஸ் ஸ்டேசன் மீது வெடி குண்டு வீசி காவல்துறையை மிரட்டி ரவுடீசத்தை கையில் எடுத்தவர்,  நாட்டு வெடிகுண்டு போடுவதில் கில்லாடியாக வலம் வந்ததால் பாம் என்று தோஸ்துகளால் செல்லாமாக அழைக்கப்பட்டவர் தான் A + கேட்டகிரி ரவுடி பாம் சரவணன்.

தனது அண்ணன் தென்னரசு மற்றும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி வாங்க பக்காவாக ஸ்கெட்ச் போட்ட சுற்றி வந்த பாம் சரவணனை ரேடாரில் கவனித்து வந்த தமிழ் நாடு போலீஸ் சுட்டுப்பிடித்திருக்கும் சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தன் அண்ணனை பார்த்து ரவுடி ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட சரவணன் கடந்த 1998 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்படுகிறார். அதிலிருந்து தான் தொடங்குகிறது இவரது ரவுடீசம். மற்ற ரவுடிகளை போல் கையில் அருவாள்,காத்தி எல்லாம் இவர் வைத்துகொள்வதில்லை இவருடன் எப்போதும் இருப்பது நாட்டு வெடிகுண்டுகள் தான். இந்த நாட்டு வெடிகுண்டுகளை இவரே உருவாக்கி செய்த சம்பவங்கள் ஏராளம்.

வெடிகுண்டுகள் வீசி பல கொலைகளை செய்த சரவணன் போலிஸ் ரெக்கார்டில் பாம் சரவணன் என்ற பெயருடனே வலம் வருகிறார்.  பிரபல ரவுடியாக இருக்கும் இவரது அண்ணன் தென்னரசு வட சென்னையின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தவர். தனக்கு எல்லா சூழ் நிலைகளிலும் பக்கபலாம இருந்த இவரது அண்ணன் தென்னரசுவை கடந்த 2015 ஆம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் குரூப் கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

தனது அண்ணன் கொலைக்கு பலிக்கு பழி வாங்க வேண்டும் என்று காத்திருந்த பாம் சரவணன் அவருடைய அண்ணிக்கு சத்தியம் செய்து கொடுத்தது போன்றே அண்ணனின் நினைவு நாளில் வசென்னை பட்டினம்பாக்கதில் இருந்த ஆற்காடு சுரேசை தனது கேங்கை வைத்து படுகொலை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி நகேந்திரன் இந்த கொலைக்கு பலிவாங்க வேண்டும் என்று பாம் சரவணனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இந்த கும்பல் தான் கைதாகி இருக்கிறது.

தனது அண்ணன் தென்னரசுவையும், உயிருக்கு உயிராக நினைத்த ஆம்ஸ்ட்ராங்கையில் அடுத்தடுத்து கொலை செய்த ஆற்காடு சுரேஷ் தம்பி நாகேந்திரன் மற்றும் அவரது குழுக்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பாம் சரவணம் திட்டம் தீட்டி வந்ததாக கூறப்படுகிறது.  இந்த தகவல் உளவுத்துறையின் மூலம் சென்னை போலீசாருக்கு கிடைக்க  இதை இப்படியே விட்டல் சரிப்பட்டு வராது இந்த கேங் வாரை எப்படி தீர்த்து கட்ட வேண்டும் என்று  நினைத்த போலீசார் பாம் சரவணனை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்தது.

இந்த நிலையில் தான் எம்.கே.பி.நகர் காவல் நிலையத்துக்குட்பட்ட முல்லை நகர் சுடுகாடு பகுதியில் உள்ள கூட்செட் ரோட்டில் பாம் சரவணன் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு சீக்ரட் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பாம் சரவணனை போலீசார் பிடிக்க முயன்ற போது தனது கையில் வைத்திருந்த வெடிகுண்டுகளை காவல் துறையினரை நோக்கி வீசியிருக்கிறார்.  அதோடு அங்கிருந்த காவலர் ஒருவரை கத்தியால் வெட்டி தப்பியோட முயன்ற பாம் சரவணனை தற்காப்புக்காக கவல்துறையினர் என்கவுண்டர் செய்து பிடித்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாம் சரவணன் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்நாடு வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இங்காவது உணவு கிடைக்குமா? நீர் நிலைகள் வற்றுவதால் தஞ்சை பகுதி வயல்வெளிகளுக்கு படையெடுக்கும் பறவைகள்Will food be found here? Birds flock to the paddy fields of the Thanjavur region as water bodies dry up. (TNN

தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
Embed widget