Arvind Kejriwal :ஆண்களுக்கு FREE BUS! கெஜ்ரிவால் பக்கா ஸ்கெட்ச்! தலைவலியில் காங்கிரஸ் | Aam Aadmi
பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இலவச பேருந்து சேவை கொடுப்பதற்கு தயாராகி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அவர் கொடுத்துள்ள வாக்குறுதி ஒன்று பாஜக, காங்கிரஸுக்கு செக் வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கவுள்ள நிலையில், பாஜக ஆம் ஆத்மி காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேசிய அளவில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கூட்டணியில் இருந்தாலும் டெல்லி தேர்தலில் நேருக்கு நேர் மோதுகின்றன. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இது முக்கியமான தேர்தலாக இருக்கிறது. சிறைக்கு சென்று வந்த பிறகு இனி மக்கள் சொன்னால் தான் ஆட்சியில் அமர்வேன் என சபதம் போட்டு முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களின் செல்வாக்கு தனக்கு தான் இருக்கிறது என்பதை காட்டுவது தான் கெஜ்ரிவாலின் நோக்கமாக இருக்கிறது.
அதனால் மக்களை கவரும் வகையிலான வாக்குறுதிகளை தயார் செய்துள்ளார். அதில் ஆண்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்கும் வகையில் வாக்குறுதி கொடுத்துள்ளது கவனம் பெற்றுள்ளது. அதாவது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதியும், மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% சலுகையும் வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தற்போது, டெல்லி அரசு பெண்களுக்கு மட்டுமே இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. டெல்லி போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து ஏசி மற்றும் ஏசி அல்லாத பேருந்துகளிலும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக சொல்லியிருப்பது பாஜகவுக்கும், காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏற்கனவே ஆம் ஆத்மியும் காங்கிரஸும் தனித்து போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சிக்கான வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே பேச்சு இருக்கிறது. இதில் ஆத் ஆத்மியின் தேர்தல் நடவடிக்கைகள் பெரும்பாலும் காங்கிரஸையே அதிக அளவில் பாதிக்கும் என சொல்கின்றனர்.





















