மேலும் அறிய

Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?

40 ஆண்டுகளுக்கும் மேல் திமுக உறுப்பினர், மூன்று முறை MLA...முதன்முறையாக அமைச்சர்.. முதல்வரின் மனம்கவர்ந்த சேலத்துக்காரர்! யார் இந்த பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்ட நிலையில், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு அமைச்சராக இடம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, மூன்று முறை சேலம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ராஜேந்திரனுக்கு, அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று அதிகம் பேசப்பட்டு வந்தது. ஆனால் அவர் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் மூன்றரை ஆண்டுகள் பிறகு அமைச்சராவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.

பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாணவர் அணி உறுப்பினராக சேர்ந்தார். இவர் சென்னை குருநானக் கல்லூரியில் பி.ஏ., பி.எல். பயின்றுள்ளார். பின்னர் 1985 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்தார். பின்னர், 1992 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். இதைத்தொடர்ந்து, 1999 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மற்றும் 2001 ஆம் ஆண்டு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பொறுப்பு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு போக்குவரத்து தொ.மு‌.சவில் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை பல்வேறு வகித்து வந்தார். மேலும் 2016 ஆம் ஆண்டு முதல் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பு பெற்று தற்போது வரை மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

மேலும் அரசு பொறுப்புகளில் ராஜேந்திரன் வகித்த பொறுப்புகள் பார்க்கும்போது, 1998 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மாநில நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவர், பெரியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகள் வகித்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பனமரத்துப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்தார். இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேலம் மத்திய மாவட்ட செயலாளராக இருந்து வரும் ராஜேந்திரன் அவர்கள் பல்வேறு கட்சி பொறுப்புகளிலும் பொதுப்பணியில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்து வந்தார். இந்த நிலையில் தற்போது முதன்முறையாக திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக அமைச்சரவையில் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் விவசாயத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதன் பிறகு திமுக அமைச்சரவையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் அளிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அமைச்சரவையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இடம்பெற்றுள்ளார். இதனால் சேலம் மாவட்ட திமுகவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

அரசியல் வீடியோக்கள்

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்
DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Thalapathy Rerelease :  ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
Thalapathy Rerelease : ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
"நீங்கள் வரும்போது மட்டும்தான் உணவு நன்றாக இருக்கும்" - ஆட்சியரிடம் புகார் அளித்த பழங்குடி மாணவர்கள்
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Embed widget