Nirmala Sitharaman angry : வழிமறித்த இளைஞர்! வெடுக்குனு பேசிய நிர்மலா! ”டெல்லிக்கு வந்து பேசுங்க”
நேருக்கு நேர் கேள்வி கேட்ட இளைஞரிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டென்ஷனாகி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் செய்தியாளரிடம் வீடியோ பதிவு செய்யாதீங்க என தடுத்த சம்பவமும் விவாதமாக மாறியுள்ளது.
கோவையில் நடந்த தொழில் அமைப்பினருடனான கலந்துரையாடலில் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் அமைச்சர் நிர்மலா சீதாராமனை நோக்கி விமர்சனத்தை வைத்தார். பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, உள்ளே வைக்குற க்ரீமுக்கு ஜிஎஸ்டியா என்றும், ஸ்வீட்டை விட காரத்திற்கு அதிக ஜிஎஸ்டி என்றும் பேசி அதிரவைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியது.
இதற்கு அடுத்ததாக கோவை கருமத்தம்பட்டிக்கு சென்ற அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அருண்சந்திரன் என்ற இளைஞர் கேள்வி ஒன்றை எழுப்பினார். செல்போன் உதிரிபாகமான செமி கண்டக்டரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது ஏன் என்றும், மத்திய அரசே அதற்கான ஏற்பாடுகளை செய்யலாமே என்றும் கூறினார். இளைஞர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் டென்ஷன் ஆன நிர்மலா சீதாராமன், அரசு வெளியிட்ட குறிப்புகளை படித்த பிறகு டெல்லி வாருங்கள் நேரில் விவாதம் செய்கிறேன் என ஆவேசமாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டீர்கள் என்றும் இளைஞர் விளக்கம் கொடுத்தார். பின்னர் இதனை வீடியோ எடுத்த செய்தியாளர்களை பார்த்து வீடியோ எடுக்காதீங்க என நிர்மலா சீதாராமன் எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.