அவரால் தான் எங்களுக்கு மகள் கிடைத்தாள்...ஆமிர் கான் உடனான ரகசியத்தை சொன்ன விஷ்ணு விஷால்
'ஆமிர் கான் இல்லையென்றால் இன்று என் மகள் இல்லை. அவள் பிறந்த உடனே நீங்கள்தான் பெயர் வைக்க வேண்டும் என்று ஆமிர் கானிடம் சொன்னேன்" - ஆமிர் கான்

விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் சூட்டிய ஆமீர் கான்
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டா தம்பதியினருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆவது பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைகளுக்கு சில நாட்கள் முன்பு பெயர் சூட்டு விழா நடைபெற்றது. பாலிவுட் நடிகர் ஆமிர் கான் விஷ்ணு விஷால் மகளுக்கு மிரா என பெயர் வைத்தார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. ஆமிர் கான் விஷ்ணு விஷால் இடையில் எப்படி இவ்வளவு நெருக்கமான நட்பு ஏற்பட்டது என பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆமிர் கானுடனான நட்பு குறித்து விஷ்ணு விஷால் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நான் ஒரு கிரேஸியான ஆமீர் கான் ரசிகன் - விஷ்ணு விஷால்
ரெட் ஜயந்த் நடத்திய நிகழ்வு ஒன்றில் ஆமிர் கான் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் நான் நடித்த ஃப.ஐ.ஆர் திரைப்படத்திற்கு விருது வாங்கினேன். ஆமீர் கானை பார்த்ததும் நான் உற்சாகமாகிவிட்டேன். சின்ன வயதில் இருந்து நான் அவருக்கு கிரேஸியான ரசிகன். எப்படியாவது அவருடன் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். என் மனைவி விளையாட்டு வீரர் என்பதால் ஆமிர் கானுடன் ஒரு முறை பேசியிருப்பதாக சொன்னார். என் மனைவியை பார்த்ததும் ஆமிர் கான் எங்களிடம் வந்து பேசினார். அப்போது நான் அவரிடம் நான் முதல் முறை பேசினேன்.
வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டார்
மும்பை வந்தால் அவரை சந்திக்கும் படி சொல்லிவிட்டு ஃபோன் நம்பர் கொடுத்துவிட்டு போனார். ஒரு வேலையாக நான் மும்பை சென்றிருந்தபோது அவருக்கு ஃபோன் செய்தேன். உடனே வீட்டிற்கு வர சொன்னார். கட்டா குஸ்தி படத்தின் டிரைலரை காட்டினேன். படத்தின் ஒன்லைன் சொன்னது உற்சாகமாகிவிட்டார். அடுத்து நடிக்க இருக்கும ஆர்யன் படத்தின் கதையை சொன்னேன். அவருக்கு அந்த கதை பிடித்திருக்கவே முழு கதையையும் கேட்டார். இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அந்த கதையைப் பற்றி பேசினோம். இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நான் ஹீரோவாக அவர் வில்லனாகவும் நடிக்க சம்மத்தித்தார். 40 மணி நேரம் கதையைப் பற்றி பேசியபின் அவர் நடிக்க முடியாது என்று மறுத்தார். அதற்கு சில நியாயமான காரணங்கள் இருந்தன.
மகளுக்கு பெயர் சூட்டிய ஏன்
அதன்பின் தனது அம்மாவின் சிகிச்சைக்காக ஆமிர் கான் சென்னை வந்திருந்தார். அப்போது அவர் மாதகணக்கில் தங்க இருந்ததால் எங்கள் வீட்டில் தங்க சொன்னேன். சிகிச்சை முடிந்து கிளம்பும் நாளில் தான் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டார். அப்போது நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியானபோது தான் எங்கள் நட்பு வெளியில் தெரியவந்தது.
நானும் ஜுவாலாவும் இரண்டு ஆண்டுகளாக செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தைக்கு முயற்சித்து வந்தோம். ஜூவாலாவுக்கு 41 வயதாகிவிட்டதால் குழந்தை பெற்றுக் கொள்வது எங்களுக்கு கடினமாக இருந்தது. ஏற்கனவே 5 , முறை குழந்தை தங்காமல் போய் ஜவாலா மனமுடைந்து முயற்சியே கைவிட்டுவிட்டார். இந்த விஷயத்தை ஆமிர் கானிடம் சொன்னபோதுதான் ஏன் இத்தனை நாள் இதை தன்னிடம் சொல்லவில்லை என்று கேட்டார். எல்லா சிகிச்சையும் விட்டுவிட்டு உடனே மும்பைக்கு வரும்படி சொன்னார். அவர் ஒரு மருத்துவரிடம் கூட்டிப்போய் 10 மாதங்கள் ஜ்வாலாவை அவர் வீட்டில் தங்கவைத்தார். அவர் இல்லை என்றால் எங்கள் மகள் பிறந்திருக்க மாட்டார். என் குழந்தை பிறந்த உடனே அவளுக்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என ஆமிர் கானிடம் சொன்னேன்.




















