ஆல்யா மானசா வீட்டிற்கு திடீர் விசிட்.. குக்கர் வெடித்து மரணமா.. ஷாக் ஆன விஜே மணிமேகலை
நடிகை ஆல்யா மானசாவின் வீட்டிற்கு சின்னத்திரை பிரபலம் ஒருவர் திடீர் விசிட் அடித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த காதல் ஜோடி ஆல்யா மானசா - சஞ்சீவ். சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தபோதே இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இனியா என்ற தொடரில் ஆல்யா நடிக்க தொடங்கினார். இந்த தொடர் முடிவடைந்த நிலையில், ஜீ தமிழில் புதிய தொடர் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், சின்னத்திரை பிரபலம் ஒருவர் ஆல்யாவின் வீட்டிற்கு விசிட் அடித்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சின்னத்திரை பிரபலம்
சின்னத்திரை நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களை கவரும் வகையில் உள்ளன. குக் வித் கோமாளி நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக இருக்கிறது. இதில் வரும் பிரபலங்களும், கோமாளிகளும் வெகுவாக கவர்ந்துவிடுவார்கள். அந்த வகையில் இதில் கோமாளியாக வந்த விஜே மணிமேகலைக்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது. பின்னர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்த பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மணிமேகலை விஜய் டிவியை விட்டே வெளியேறினார்.
டான்ஸ் ஜோடி டான்ஸ்
விஜய் டிவியை விட்டு விலகிய மணிமேகலை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் விஜே மணிமேகலை செய்யும் ரகளையும், லூட்டிகளும் அலப்பறையாக இருந்தது. பாபா பாஸ்கர் மாஸ்டரையும் பங்கமாக கலாய்த்து வருகிறார். அதே நேரத்தில் காதல் திருமணத்தால் பெற்றோரை பிரிந்திருக்கும் மணிமேகலை மிகவும் மன வேதனையுடன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து சின்னத்திரை நடிகர்கள் பலர் மணிமேகலைக்கு நண்பர்களாக இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் ஆல்யா மானசா.
சர்ப்ரைஸ் அளித்த மணிமேகலை
இந்நிலையில், விஜே மணிமேகலை lனது கணவருடன் ஆல்யா மானசாவின் வீட்டிற்கு விசிட் அடித்திருக்கிறார். இந்த சர்ப்ரைஸை நான் எதிர்பார்க்கவில்லை என்றும் ஆல்யா தெரிவித்திருக்கிறார். மேலும், ஆல்யாவின் சிறு வயதில் ஒரு கனவு வந்தது. அந்த கனவில் என்னை கவனித்துக்கொள்ளும் ஒருவர் சமைத்துக்கொண்டிருந்த போது குக்கர் வெடித்து இறந்து போனதாக ஆல்யா தெரிவித்தார். இதைக்கேட்டு ஷாக் ஆன மணிமேகலை இப்படியெல்லாம் உனக்கு கனவு வருது. நான் சாகுற மாதிரி கனவு வராம இருந்தா ஓகே என தெரிவித்தார். பின்பு ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதி தங்களது சமூகவலைதளத்தில், இதனை பதிவிட்டு இந்த நாளை இனிமையாக மாற்றிய மணிமேகலைக்கும் அவரது கணவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram




















