மேலும் அறிய

VK Pandian | தேர்தல் தோல்வி..VK பாண்டியன் மீது விழும் பழி நவீன் பட்நாயக் நச் பதிலடி

ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தின் தேர்தல் தோல்விக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி.கே. பாண்டியனே காரணம் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அதற்கு நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்துள்ளார்.

வரலாற்று ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பழமை வாய்ந்த மாநிலங்களில் ஒன்று ஒடிசா. ஒடிசாவை கடந்த 24 ஆண்டுகளாக பிஜூ ஜனதா தளம் ஆட்சி செய்து வந்த நிலையில், அவர்களது ஆட்சியை தற்போது நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக ஒடிசா முதலமைச்சராக பதவி வகித்தவர் பிஜூ ஜனதா தள கட்சி தலைவர் நவீன் பட்நாயக். ஒடிசாவில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த இவரே, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அந்தளவுக்கு நிலைமை அங்கு மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுபவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி. கே. பாண்டியன். தமிழ்நாட்டை சேர்ந்த இவர், பிஜு ஜனதா தளத்தில் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்தபடியாக அதன் தலைவராக வருவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், சமீபத்தில் அரசுப் பணியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். ஒடிசாவில் அரசு அதிகாரியாக பணியாற்றியபோது, மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் இணைந்து நலத்திட்டங்கள் வகுப்பதில் முக்கிய பங்காற்றினார். இந்த நிலையில், தேர்தல் தோல்வியை தொடர்ந்து வி.கே. பாண்டியன் மீது கடும்  விமர்சனங்கள் எழுந்து வருகிறது. 

இதற்கு முதல்முறையாக பதில் அளித்த நவீன் பட்நாயக், "பாண்டியன் மீது சில விமர்சனங்கள் எழுகின்றன. இது துரதிர்ஷ்டவசமானது. பாண்டியன் கட்சியில் சேர்ந்தார். எந்த பதவியும் வகிக்கவில்லை. இந்த தேர்தலில் அவர் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. என்னுடைய வாரிசு யார் என என்னிடம் கேட்கும் போதெல்லாம் ​பாண்டியன் இல்லை என்று நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். எனது வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள் என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தேர்தலில் வெற்றி, தோல்வி எல்லாம் மக்கள் கையில் உள்ளன. ஜனநாயகத்தில் ஒன்று வெற்றி அடையலாம் அல்லது தோல்வி அடையலாம். எனவே, நீண்ட நாட்களுக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்ட நாங்கள், மக்களின் தீர்ப்பை எப்போதும் மகழ்ச்சியாக எடுத்து கொள்ள வேண்டும்" என்றார்.

அரசியல் வீடியோக்கள்

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
Rahul Gandhi protest | 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget