விஜய் வீட்டில் IT ரெய்டு! அருண் ராஜ்-க்கு சம்பந்தமா? வைரல் வீடியோ - FACT CHECK
விஜய் வீட்டில் ரெய்டு நடத்திய அருண் ராஜ் தான் தற்போது தவெகவில் இணைந்துள்ளதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருப்பது அருண்ராஜா? உண்மை என்ன? என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.
ஐஆர்எஸ் பதவியை ராஜினாமா செய்த அருண்ராஜ் விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரிடம் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பை ஒப்படைத்தார் விஜய். விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே மறைமுகமாக அவருக்கு அரசியல் ஸ்ட்ராடஜிகளை சொல்லிக்கொடுத்து பக்கபலமாக இருந்த அருண்ராஜ் தற்போது கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்தநிலையில் அவர் 2020ல் அதிகாரியாக இருந்த போது விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2020ம் ஆண்டு விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று வருமானத்துறை அதிகாரிகள் விஜய்யிடன் சம்மன் வழங்கியது பரபரப்பை கிளப்பியது. அதேபோல் சென்னையில் உள்ள விஜய்யின் வீட்டிலும் ரெய்டு வேட்டை நடந்தது.
இந்த காட்சிகளை வைத்து அருண் ராஜ் தான் ரெய்டு நடத்தியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது அருண்ராஜ் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலு,ம் இதுதொடர்பாக அருண்ராஜிடமே கேள்வி எழுப்பப்பட்டதற்கு, விஜய் வீட்டுக்கு வருமானவரித்துறை ரெய்டு வந்த சம்பவத்தில் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்பதில் உண்மையில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
2016ம் ஆண்டு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியின் கூட்டாளிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து பாராட்டு பெற்றவர் அருண்ராஜ். அந்த காட்சிகளை வைத்து சேகர் ரெட்டி வழக்கு சம்பந்தமாக தான் அருண்ராஜ் ரெய்டு நடத்தியுள்ளார் என சொல்லி தவெகவினர் சமூக வலைதளங்களில் பதில் கொடுத்து வருகின்றனர்.





















