MLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்
’’இதெல்லாம் சரியா வராது…இப்படிதான் வேலை செய்வீங்களா’’ என நாமக்கல்லில் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த எம் எல் ஏ கொங்கு ஈஸ்வரன், அதிகாரிகளை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ₹53.39 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ ஈஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுவற்றில் டைல்ஸ் சரியாக ஒட்டப்படாமல் இருந்ததை கண்டு கடும் கோபமடைந்தார். இதனையடுத்து அதிகாரிகளிடம் என்ன இது இப்படிதான் வேலை செய்வீங்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து ஆய்வு செய்த அவர், பல இடங்களில் இதே போல் கட்டுமான பணிகளில் குறைகள் இருந்ததை கண்டு டென்ஷனானார்.
இந்நிலையில் கோபத்தில் எம் எல் ஏ ஈஸ்வரன் அதிகாரிகளை டோஸ்விடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.