Vadakalai Vs Thenkalai fight | வடகலை Vs தென்கலை “ச்சீ நீ வெளிய போடா” களேபரமான உற்சவம்
காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளில் வடகலை - தென்கலை ஏற்பட்ட மோதல் பிரச்சினை வீதிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வடகலை - தென்கலை பிரிவின கோஷ்டிகள் கோயில் விழாக்களில் திவ்ய பிரபந்தமோ, வேத பாராயணமோ பாட கூடாது என கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்தநிலையில் கங்கைகொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளி பக்தர்களுக்கு வரதர் காட்சி அளிக்கும்போது, தாத்தாச்சாரி குடும்பத்தினர் மந்திர புஷ்பம் எனும் வேத மந்திரங்களை பாட தென் கலை பிரிவினரும் பாடுவோம் என கூற வாக்குவாதம் ஏற்பட்டது. கோவில் நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி வேத பாராயணம் செய்ததால் காவல்துறையினர் சமாதானம் செய்து வைத்தனர்.
தற்போது இரண்டாவது நாளாக மீண்டும் தென்கலை - வடக்கலை இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சுற்றிலும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளனர் என்பதை கூட பார்க்காமல், வடகலை - தென்கலை என இரு பிரிவினரும் பேசவே நா கூச்சம் அவ சொற்களை மக்கள் மத்தியில் மாறி மாறி பேசி திட்டி கொண்டனர். டிஸ்னரியில் கூட காண முடியாத வார்த்தைகளையும், இலக்கண புத்தகத்தில் கூட கண்டுபிடிக்க முடியாத நா கூசும் அவ சொற்களையும் , பொதுமக்கள் மத்தியில் வடகலை தென்கலையினர் பேசிய பேச்சை கண்டு காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மோசமான சம்பவங்கள் அனைத்தும் கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்துள்ளது.
பல ஆண்டுகளாக கோயில் வளாகத்துக்குள்ளையே நடந்த இந்த வாக்குவாதம் தற்போது வீதிக்கு வந்துவிட்டது, நாங்கள் முழு மனதுடன் பெருமாளை தசிக்க முடியவில்லை என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புலம்புகின்றனர். மேலும் நீதிமன்ற வழிகாட்டல்கள் இருந்தும் இந்த பிரச்சனைக்கு இந்து சமய அறநிலையத்துறை செயலாளரோ அல்லது அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களோ தீர்வு காண ஏன் முற்படவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.