Kanchi Kamakoti Peetam | காஞ்சிபுரம் சங்கர மடத்தின் புதிய பீடாதிபதி..!யார் இந்த கணேச சர்மா?
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று பொறுப்பேற்று கொண்டார்.
காஞ்சிபுரம் சங்கர மடம் உலக அளவில் பிரசித்தி பெற்ற மடமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தில், பீடாதிபதி சங்கராச்சாரியார் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர். காஞ்சிபுரம் சங்கர மடம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அலுவல்முறை வரலாற்றின் படி, காஞ்சிபுரம் சங்கரமடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. காஞ்சிபுரம் சங்கரமடம் என்பது இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற மடம் என்பதால், இங்கு நடக்கும் ஒவ்வொரு நகர்வுகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ சுப்பிரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு மடத்தின் தற்போதைய 70 வது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்க தீர்த்த திருக்குளத்தில் சன்னியாச ஆசிரம தீட்சை வழங்கினார்.
கோயில் திருக்குளத்தில் ஆதீனங்கள், சன்னியாசிகள் ஆகியோருக்கு மிதக்கும் தெப்பலில் அமர்ந்து நிகழ்வை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி அம்பிகையை தரிசித்தனர். இளையமடாதிபதிக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளைய மடாதிபதிக்கு ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற பெயர் சூட்டப்பட்டது.
பின்னர் மடாதிபதிகள் இருவரும் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து சங்கர மடத்திற்கு மங்கல மேல வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அங்கு இளையமடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71 வது பிடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.





















