மேலும் அறிய

Untold Stories 7 : ஆக்ஸ்போர்டில் படிப்பு...! ஹாக்கிதான் துடிப்பு...! இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்றுத்தந்த பழங்குடியின வீரர் ஜெய்பால்சிங் முண்டா...!

விளையாட்டு உலகில் நாம் இதுவரை அறிந்திராத பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை அன்டோல்ட் ஸ்டோரி என்ற தொடர் மூலம் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம்.

இந்தியா ஹாக்கி என்பது சுதந்திரத்திற்கு பின்பும், சுதந்திரத்திற்கு பின்பும் நீண்ட வரலாறும் பாரம்பரியமும் கொண்டது. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய ஹாக்கி எப்படி ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை குவித்துள்ளதோ, அதேபோல சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய ஹாக்கியும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. முதன் முதலாக ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற இந்திய ஹாக்கி அணியை வழிநடத்திச் சென்றவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜெய்பால்சிங் முண்டா.

Untold Stories 7 : ஆக்ஸ்போர்டில் படிப்பு...! ஹாக்கிதான் துடிப்பு...! இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்றுத்தந்த பழங்குடியின வீரர் ஜெய்பால்சிங் முண்டா...!

இன்றைய ஜார்க்கண்டாகவும், அப்போதைய பீகாரின் கீழ் இருந்த குந்தி மாவட்டத்தில் (ராஞ்சி) 1903ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி பிறந்தவர் ஜெய்பால்சிங் முண்டா. முண்டா என்ற பழங்குடியினத்தில் பிறந்த இவருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் மூலமாக பள்ளிக்கல்வி கிடைத்தது. இவரது படிப்பு மற்றும் தலைமைப்பண்பு ஆர்வத்தைக் கண்ட கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் இவருக்கு உலகப்புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் படிப்பதற்கு வாய்ப்புகளைப் பெற்றுத்தந்தது. ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் ஹானர்ஸ் பட்டத்தை பெற்றார்.

பள்ளி காலம் முதலே ஹாக்கியில் ஆர்வம் கொண்ட ஜெய்பால்சிஙகின் ஆட்டம் ஆக்ஸ்போர்ட் சென்ற பிறகு மேலும் மெருகேறியது. அங்கு அவருக்கு பல்கலைகழகத்தில் விளையாட்டிற்கு என்று வழங்கப்படும் உயரிய விருதான ஆக்ஸ்போர்ட் ப்ளூ என்ற விருது வழங்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை ஜெய்பால்சிங்கிற்கே சேரும்.

Untold Stories 7 : ஆக்ஸ்போர்டில் படிப்பு...! ஹாக்கிதான் துடிப்பு...! இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்றுத்தந்த பழங்குடியின வீரர் ஜெய்பால்சிங் முண்டா...!

பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற ஜெய்பால்சிங் முண்டா அப்போதைய ஆங்கில அரசு நடத்திய இந்திய குடிமைப்பணி தேர்வை சிறப்பாக எழுதி தேர்ச்சியும் பெற்றார். ஜெய்பால்சிங் முண்டா இந்திய குடிமைப்பணிக்கு தேர்வான சில வாரங்களிலே இவருக்கு இந்திய ஹாக்கி அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித்தொடர் ஆகும். இந்திய ஹாக்கி அணி பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டித்தொடரும் ஆகும். ஆனால், அப்போதைய ஆங்கிலேய அரசு ஜெய்பால்சிங்கிற்கு விடுமுறை அளிக்க மறுத்துவிட்டது. இதனால், ஜெய்பால்சிங் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்காக ஹாக்கி ஆட களமிறங்கினார்.

மேலும் படிக்க : Untold Story Episode 7: தலிபான்களால் தந்தை கொலை..! போலி பாஸ்போர்ட் மூலமாக தப்பியோட்டம்..! கால்பந்து வீராங்கனையின் தீரமான கதை...!

மேலும் படிக்க : Untold Stories 6 : முதல் ஹாட்ரிக்..! முதல் அர்ஜூனா விருது..! மறக்கப்பட்ட இந்திய மகளிர் கால்பந்தின் ரியல் சிங்கப்பெண் சாந்தி முல்லிக்...!

சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய ஹாக்கி அணியில் சில ஆங்கிலோ- இந்தியர்களும், ஆங்கிலேயர்களும் இந்தியாவிற்காக  களமிறங்கினர். ஆனாலும், அவரது அபார ஆட்டத்திறனைக் கண்ட அப்போதைய ஹாக்கி அணி நிர்வாகம் அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கியது. அவரது தலைமையில் களமிறங்கிய இந்திய ஹாக்கி அணி அந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 17 போட்டிகளில் ஆடியது. அவற்றில் 16 போட்டிகளில் அபார வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் மட்டும் டிரா செய்தது.

Untold Stories 7 : ஆக்ஸ்போர்டில் படிப்பு...! ஹாக்கிதான் துடிப்பு...! இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்றுத்தந்த பழங்குடியின வீரர் ஜெய்பால்சிங் முண்டா...!

இறுதிப்போட்டியில் ஹாலந்து அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கிக்காக முதல் தங்கப்பதக்கத்தையும் வென்று தந்தார். அந்த தொடரில் குறிப்பாக இந்திய அணி ஆஸ்திரிய அணியை 6-0, பெல்ஜியத்தை 9-0, சுவிட்சர்லாந்தை 5-0, நெதர்லாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசகாய சூரனாக வலம்வந்தது.  

சிறந்த தடுப்பு ஆட்டக்காரரான ஜெய்பால்சிங் அந்த தொடரில் இந்தியா தங்கம் வெல்ல முக்கிய பங்காற்றினார், அவரது ஆட்டத்திறனை கண்ட அப்போதைய வைசிராய் அவரை அழைத்து பாராட்டினர். ஜெய்பால் சிங் விளையாட்டு வீரராக இருந்தாலும் தனது பழங்குடியின மக்கள் மீது தீராத பாசம் கொண்டிருந்தார். இதனால், அவர்களுக்காக 1939ம் ஆண்டு ஆதிவாசி மகாசபா என்ற அமைப்பை உருவாக்கினார். ஜார்க்கண்ட் மாநிலம் உருவாவதற்காக முக்கிய பங்காற்றியுள்ளார்.

Untold Stories 7 : ஆக்ஸ்போர்டில் படிப்பு...! ஹாக்கிதான் துடிப்பு...! இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்றுத்தந்த பழங்குடியின வீரர் ஜெய்பால்சிங் முண்டா...!

இதற்காக சுபாஷ் சந்திர போசின் உதவியையும் நாடியுள்ளார். ஜார்க்கண்ட் கட்சி என்ற கட்சியை உருவாக்கி பீகார் சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். இந்திய அரசியலின் முக்கிய தலைவராக வலம் வந்த ஜெய்பால்சிங் முண்டா பிரமோத் பகான் என்று மக்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் தனது 67 வயதில் 1970ம் ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget