Watch Video: அந்தரத்தில் அந்தர்பல்டி.. அசாத்திய கேட்ச் பிடி்தத அலெக்ஸ் கேரி.. சோகத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்
England vs Australia: இங்கிலாந்து வீரர் பில் சால்ட் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்த அசாத்தியமான கேட்ச்சை ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி பிடித்தார்.

Champions Trophy England vs Australia: சாம்பியன்ஸ் டிராபி விறுவிறுப்பாக பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
அந்தரத்தில் பறந்து பிடித்த கேட்ச்:
இதையடுத்து, ஆட்டத்தை பில் சால்ட் - பென் டக்கெட் தொடங்கினர். ஆட்டத்தைத் தொடங்கிய பில் சால்ட் அதிரடியாக ஆடினார். அவர் பவுண்டரி, சிக்ஸர் அடித்தார். அதன்பின்பு, அவர் மீண்டும் அதிரடியாக ஒரு பவுண்டரியை துவார்ஷிஸ் பந்தில் அடிக்க முயற்சித்தார். ஆனால், பவர் ப்ளே வட்டத்திற்குள் நின்று கொண்டிருந்த அலெக்ஸ் கேரி அந்தரத்தில் பறந்து அசாத்தியமாக அந்த பந்தைப் பிடித்தார்.
A STUNNER FROM FLYING ALEX CAREY. 🥶 pic.twitter.com/Qkaan8iTaC
— Johns. (@CricCrazyJohns) February 22, 2025
இதனால், அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய பில் சால்ட் அவுட்டாகி ஏமாற்றத்துடன் திரும்பினார். அவர் 6 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி பிடித்த இந்த கேட்ச் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்கெட் கீப்பராக செயல்பாடும் இந்த போட்டியில் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்கயுள்ளார். அவருக்குப் பதிலாக ஜோஷ் இங்கிலீஷ் விக்கெட் கீப்பராக ஆடி வருகிறார்.
இங்கிலாந்து நிதானமான ஆட்டம்:
தற்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. டக்கெட் - ஜோ ரூட் இருவரும் இணைந்து நிதானமாக ஆடி வருகின்றனர். பில் சால்ட் அவுட்டான பிறகு களமிறங்கிய ஜேமி ஸ்மித்தும் அதிரடியாக ஆட முயற்சித்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் 3 பவுண்டரிகளை விளாசிய அவர் 13 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தற்போது பென் டக்கெட் 43 ரன்களுடனும், ஜோ ரூட் 31 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
ப்ளேயிங் லெவன்:
கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், ஸ்டோய்னிஸ் ஆகியோர் இல்லாத நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், லபுஷேனே, ஜோஷ் இங்கிலீஷ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், பென் துவார்ஷிஸ், நாதன் எல்லீஸ், ஜம்பா, ஜான்சன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
ஜோஸ் பட்லர் தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பில் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன், ப்ரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியில் வலுவான பந்துவீச்சு இல்லாவிட்டாலும் ஸ்பென்ஸர் ஜான்சன், துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களுடனும், மேக்ஸ்வெல், ஜம்பா ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களுடனும் ஆஸ்திரேலியா களமிறங்கியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

