”ஒத்துழைப்பு கொடு” அரசு மருத்துவமனை பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை... போலீசார் விசாரணை.
Salem : "நீ எங்கள் மூவருக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தவறான எண்ணத்தில் என்னை அழைக்கின்றனர்" என தனியார் நிறுவன ஊழியர் புகார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் நோயாளிகளை ஒரு துறையில் இருந்து, மற்றொரு துறைக்கு பரிசோதனைக்கு அழைத்து செல்வது, தூய்மை பணியில் ஈடுபடுவது, பாதுகாப்பு பணி உள்ளிட்ட பணிகளில் ஏராளமான கிரிஸ்டல் நிறுவனம் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றிய 30வயது பெண் பணியாளர் ஒருவருக்கு கிரிஸ்டல் நிறுவனத்தின் அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்தாக சேலம் மாநகர போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கணவரை பிரிந்து எனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறேன். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவனையில் கடந்த 10 வருடங்களாக பணி செய்து வருகிறேன். கிரிஸ்டல் நிர்வாகத்தின் மேலாளர், செக்யூரிட்டி ஏஎஸ்ஓ, சூப்பர்வைசர் ஆகியோர் சேர்ந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்து வருகின்றனர். நான் அவர்களிடம் இருந்து விலகிய நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கு வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இவர்களின் தூண்டுதலின் பேரில், மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணிடம் ₹20 ஆயிரம் பணத்தை வாங்கியதாக என் மீது அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் போலீசில் பொய்யாக புகார் கொடுத்துள்ளனர். இந்த பொய் புகாரில் இருந்து விடுபட வேண்டும் என்றால், கிரிஸ்டல் நிர்வாகத்தின் குறிப்பிட்ட மூன்று பேரின் ஆசைக்கு இணங்கும்படி என்னை வற்புறுத்தி வருகின்றனர். உடல்நிலை சரியில்லாத போது விடுமுறை எடுத்தேன்.
இதையும் படிங்க: St Thomas Mount Railway Station: சென்னையின் புதிய போக்குவரத்து மையம்.. ஏர்போர்ட் லெவலுக்கு மாறும் பரங்கிமலை ரயில் நிலையம்..!
பின் மீண்டும் வேலைக்கு வர கிரிஸ்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, நீ எங்கள் மூவருக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தவறான எண்ணத்தில் என்னை அழைக்கின்றனர். இவ்வாறு என்னை பலவிதமான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றனர். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 கிரிஸ்டல் அதிகாரிகள் மற்றும் பொய்யான புகார் அளித்த பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

